பக்கம்:என் சுயசரிதை.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20

(Private Secretary) இருக்கிறார் என்று சந்தோஷத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். இங்கு கிடைத்த எனது இரண்டாவது நண்பர் மேற்சொன்ன ஸ்ரீனிவாச பாயின் அண்ணன் அ. வாமன் பாய் என்பவர். இவர் 1888-ஆம் வருஷம் எங்கள் வகுப்பிற்கு மேல் வகுப்பில் படித்திருந்தார். ஆயினும் ஸ்ரீனிவாச பாாயின் மூலமாக எனக்கு சிநேகிதமானார் மிகுந்த பத்திசாலி. மனிதர்களுடைய குணங்களை அறிவதிலும் புத்தகங்களின் சாரங்களை கிரகிப்பதிலும் வெகு நிபுணர். இவர் பல வருடங்களுக்கு முன் காலமானார்.

இங்கு என் பாக்கிய வசத்தால் எனக்கு கிடைத்த சிநேகிதர் களுள் ராமராய நிம்கார், பார்த்தசாரதி ராயநிம்கார் என்னும் இரண்டு சகோதரர்கள். இருவரும் தெலுங்கு பாஷையில் மிகுந்த நிபுணர்கள். இவர்கள் காளஹஸ்தி சமஸ்தானத்தைச் சேர்ந்தவர்கள், பிற்காலத்தில் மூத்தவராகிய ராமராய நிம்கார் பானகல் ராஜ பட்டம் பெற்றார். இவர் என்னை விட சுமார் 10 வருடம் மூத்தவர். இவர் காலமாகி விட்டார். பார்த்தசாரதி ராய நிம்கார் தற்காலம் பானகல் ராஜாவாகி ஜீவ்ய திசையில் இருக்கிறார்.

மற்றெருவர் வே. பா. ராமேசம். இவர் பிற்காலம் வைகோர்ட் ஜட்ஜாகி சர் பட்டம் பெற்றார். இவர் 1958 வது வருடம் மரணமடைந்தார். இவர் அபாரமான ஞாபக சத்தி உடையவர். நாங்கள் பரிட்சைக்குப் போனபோது இன்ன மார்க்ஸ் (marks) வாங்கினோம் என்று மறவாது சொல்வார்.

என் புதிய சிநேகிதர்களுள் மற்றெருவர் சிங்காரவேலு முதலியார். இவர் கணிதத்தில் மிகுந்த கெட்டிக்காரர். பிற் காலத்தில் சில காலம் பச்சையப்பன் கல்லூரியில் பிரதம உபாத்தியாயராக இருந்தார். இவர் நடுவயதிலேயே இறந்து போனார் என்று நான் சொல்ல வேண்டும்.

மற்ற சிநேகிதர்களுள் ஜெகதீச ஐயர், மண்டயம் திரு நாராயணாச்சாரி மிஸ்டர் பிண்டோ முதலியவர்களை குறிக்க வேண்டும். இவர்களுள் கடைசியாகக் குறித்த பின்டோ என்பவர் மாத்திரம் மங்களூரில் உயிர் வாழ்ந்து வருகிறார்.

பிரசிடென்சி காலேஜில் நான் சேர்ந்ததினால் அடைத்த முக்கியமான லாபம் என்னவென்றால் அதுவரையில் இல்லாதபடி புதிதாய் பலஜாதி வகுப்பினர்களுடன் கலந்து அவர்களின் நட்பைப் பெற்று என் புத்தி விசாலமானதெனக் கூற வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:என்_சுயசரிதை.pdf/22&oldid=1109702" இலிருந்து மீள்விக்கப்பட்டது