பக்கம்:என் சுயசரிதை.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

21

இங்கு சற்று நிதானித்து அக்காலத்து எப். ஏ. பரிட்சையில் நாங்கள் படிக்க வேண்டுய பாடங்களைப்பற்றி சற்று எழுத விரும்புகிறேன். முதலில் தற்காலத்து எஸ். எஸ். எல். சி. [S. S. L. C.) பரிட்சைதான் பழைய மெட்ரிகுலேஷன் எனலாம். இரண்டாவது இண்டர் மீடியட் பழைய எப். ஏ. பரிட்சையாகும். அக்காலத்தில் எப். ஏ. பரிட்சைக்கு போகும் ஒவ்வொரு பிள்ளையும் கட்டாயமாய் தேற வேண்டிய பிரிவுகள் ஆங்கிலம், தமிழ், தர்க்கம், உடற்கூறு சாஸ்திரம், சரித்திரம், கணித சாஸ்திரம், இவைகள் ஒவ்வொன்றிலும் பிரத்யேகமாக வாங்க வேண்டிய மார்க்குகள் வாங்காவிட்டால் தேற முடியாது. இந்த வகுப்பில் டிரிக்னாமெட்ரி என்னும் கணித நூல் வந்து சேர்ந்தது. வாஸ்தவமாய் இது என் மூளையில் ஏறவேயில்லை. இன்றைக்கும் சைன் தீடா, கோசைன் தீடா என்றால் என்ன என்று யாராவது என்னைக் கேட்டால் பதில் சொல்லத் தெரியாது. இப்படி இருக்கும்போது எப். ஏ. வகுப்பில் பள்ளிக் கூடத்து வருடாந்திர பரிட்சையில் நான் கணக்கில் கடைசி பிள்ளையாக நின்றது ஆச்சரியமில்லை. இந்த பரிட்சையில் கணக்கில் எங்கள் வகுப்புப் பிள்ளைகள் மார்க்குகளை யெல்லாம் சக்கரவர்த்தி ஐயங்கார் என்னும் கணித புரொபசர், புரோபசராகிய பூண்டி ரங்க நாத முதலியாரிடம் கொண்டு போய் கொடுத்து விட்டார். அவர் தன் வகுப்பில் நாங்கள் எல்லோரும் சேர்ந்த பொழுது ஒரு தினம் பிள்ளைகளுடைய மார்க்குகளை யெல்லாம் படித்துக் கொண்டு வந்தார். நன்றாக மார்க்கு வாங்கின ஜகதீசன், திருநாராயணாச்சாரி, சிங்காரவேலு முதலிய பிள்கைளுடைய மார்க்குகளை படித்தபோது மிகவும் நல்லது (Very good) என்று சொல்லிக் கொண்டு வந்தார். எனக்கு அப்போதே தெரியும் எனக்கு என்ன வரப்போகிறதென்று! அவர் படித்த பட்டியில் கடைசி பெயர் என்னுடையது. நூற்றிற்கு 23 மார்க்கோ என்னவோ வாங்கினேன். (இதுவும் யூக் லிட் பேபர் போலும்), “சம்பந்தம் 23 மார்க்” என்று படித்து விட்டு “சம்பந்தம்! உன் சிறு வயதில் நன்றாய் படித்துக் கொண்டிருந்தாயே” என்று தான் சொன்னார். உடனே வகுப்பில் என்னையுமறியாதபடி கண்ணீர் விட்டு அழுது விட்டேன்.

அன்று சாயங்காலம் வீட்டிற்குப் போனவுடன் இது உதவாது இப்படியிருந்தால் நான் எப். எ. (F.A) பரிட்சையில் தேறவே முடியாது. இதற்கென்ன செய்வது என்று யோசித்த டிக்னாமெட்ரி புஸ்தகத்தை எடுத்து வைத்துக் கொண்டு அதிலிருந்த புக்வர்க் (Book work) என்னும் பாகத்தையெல்லாம் ‘ஈயடித்தான் ரைடர்’ மாதிரி காபி பண்ண ஆரம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:என்_சுயசரிதை.pdf/23&oldid=1123262" இலிருந்து மீள்விக்கப்பட்டது