பக்கம்:என் சுயசரிதை.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

33

யது என் இச்சையில் இருக்கிறது. அதை செய்து கோர்ட்டார் அவர்களுடைய காலத்தை வியாஜ்யத்தில் வீணாக போக்குவ தற்கு எனக்கிஷ்டமில்லை” என்று கூறி உட்கார்ந்தேன். பாடம் துரை நான் செய்தது சரியானது என்று ஒப்புக்கொண்டு ஏதோ புகழ்ந்தனர். கட்சிக்காரர்கள் சொல்வதை பொறுமையுடன் கேட்டு இந்த வியாஜ்யத்தை ஜெயிப்பது கஷ்டம் என்று எனக்குத் தோன்றினால் கட்சிக்காரர்களிடம் உண்மையைக் கூறி “ஏன் எனக்கு பீஸ் கொடுக்கிறீர்கள் ? இந்த பணத்தை ஏதாவது தர்மம் செய்யுங்கள்” என்று சொல்லியனுப்பி இருக்கிறேன் பல தடவைகளில்.

இப்படி செய்ததால் கட்சிக்காரர்களுடைய நட்பைப்பெற்று எனக்கு ஸ்மால்காஸ் கோர்ட்டில் முக்கியமாக அதிக கேசுகள் வந்தன. இதுதான் பிறகு மேல் அதிகாரிகள் என்னை ஸ்மால் காஸ் கோர்ட் ஜட்ஜாக நியமித்ததற்கு அஸ்திவாரமாக இருந்ததென நம்புகிறேன்.

குறுக்கு கேள்விகள் கேட்பதில் கொஞ்சம் வல்லவன் என்ற பெயர் பெற்றபடியால் எனக்கு சென்னையிலும், வெளியிலும் கிரிமினல் வியாஜ்யங்கள் கிடைத்தன. இந்த அனுபவம் பிறகு சிலகாலம் சீப் பிரசிடென்ஸி மாஜிஸ்டிரேட்டாக நியமிக்கப்பட்டபோது எனக்கு உபயோகமாயிருந்தது.

நான் முக்கியமாக வியாஜ்யம் நடத்திய சில ஜட்ஜ்களைப் பற்றிக் கொஞ்சம் எழுத விரும்புகிறேன். நான் வக்கீலாக வேலை செய்ய ஆரம்பித்தபோது ஸ்மால்காஸ் கோர்ட்டில் இரண்டாவது ஜட்ஜாக இருந்தவர் டி. ரொஸொரியோ (D. Rozorio) என்பவர் அவர் மிகுந்த பொறுமையான சுபாவமுடையவர். அவர் தினம் சரியாக பதினோறு மணிக்கு நிமிஷம் தவறாமல் கோர்ட்டுக்கு வந்து உட்காருவரர். அன்றியும் வியாஜ்யங்களை சீக்கிரம் தீர்மானிப்பார். இந்த இரண்டு குணங்களையும் நான் அவரிடமிருந்து கற்றுக் கொண்டேன். பிறகு அதே கோர்ட்டில் அதே நாற்காலியில் ஸ்மால்காஸ் கோர்ட் ஜட்ஜாக நான் சில வருஷம் நடவடிக்கை நடத்திய போது இவ்விரண்டும் எனக்கு மிகவும் பயனளித்தன. ஆனால் அவருடைய பொறுமையை நான் கற்றுக் கொள்ளவில்லை!

ஸ்மால்காஸ் கோர்ட்டில் என்காலத்தில் மற்றொரு ஜட்ஜாக இருந்தவர் மண்டயம் O.பார்த்தசாரதி ஐயங்கார் அவரிடம் நான் கற்றது வியாஜ்யத்தில் முடிவில் சம்அப் (Sum.up) செய்யும்போது முக்கியமான அம்சங்களை எவ்வளவு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:என்_சுயசரிதை.pdf/35&oldid=1112834" இலிருந்து மீள்விக்கப்பட்டது