பக்கம்:என் சுயசரிதை.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36

போது சுமார் 20 ஆயிரம் கேசுகள் இருந்தன வருடம் ஒன்றிற்கு, தற்காலம் 5 அல்லது 6 ஆயிரம் கேசுகளுக்கு மேல் இல்லை.

ஜட்ஜான ஒரு வாரத்திற்கெல்லாம் கேசுக்களை, சீக்கிரம் முடிக்கும் வழியைக் கற்றுக் கொண்டேன். இதற்கு இரண்டு மூன்று குணங்கள் அநுகுணமாய் இருந்தன. அதாவது அக் காலத்தில் சாதாரணமாக மாறுபாடிகள் கேசுகள் தான் அதிக மாயிருந்தன. வக்கீலாயிருந்த போது ஏறக்குறைய எல்லா மாறுபாடிகளும் என்னிடம் தங்கள் வியாஜ்யங்களை ஒப்புவிப் பார்கள். இதனால் அவர்கள் கணக்கு ஊழல்களெல்லாம் நன்றாய்த் தெரியும். ஆகவே அவர்களுடைய வியாஜ்யங்கள் நான் ஜட்ஜாக இருக்கும் போது என் முன் வந்தால் அவர்கள் கணக்குகளின் மர்மங்களையெல்லாம் அறிந்திருந்தபடியால், அவர்கள் பொய் சொல்லி என்னை ஏமாற்றுவது அசாத்தியமாயிருந்தது. இதைக் கண்ட மாறுபாடிகள் தங்கள் வியாஜ்யங்கள் என் கோர்ட்டுக்கு முன்பு வராதபடி செய்ய முயன்றனர். இதையறிந்த அக்கால சீப் - ஜட்ஜாக இருந்த திவான் பகதூர் C. R. திருவேங்கடாச்சாரியார் இதைத் தடுத்து வந்தனர். மாறுபாடிகள் என் கோர்ட்டுக்கு முன்பாக வருவதற்கே அஞ்சுவார்கள் என்றே சொல்ல வேண்டும். அவர்கள் கோர்ட்டுக்கு வெளியில் என்னை எப்போதாவது சந்தித்தால் “என்னாங்க சாமி, வக்கீலாக எங்ககிட்டே பீஸ் (Fees) வாங்கி சாப்பிட்டுட்டு இப்போ எங்க வாயிலே மண்ணை போடுகிறீர்களே” என்று கேட்பார்கள். இரண்டாவது, வக்கீல்கள் தங்கள் - வியாஜ்யங்களைத் தள்ளி வைக்க வேண்டுமென்று அடிக்கடி கேட்காம லிருக்க ஒரு யுத்தி செய்தேன். வியாஜ்யத்திற்கு வாய்தா போட வேண்டுமென்று கேட்கும் வக்கீல்களை யெல்லாம் மறு வாய்தாக்கள் எதிர்ப்பட்சத்திற்கு தினம் படி (Day fees) கொடுக்க வேண்டுமென்று உத்தரவிடுவேன். இதனால் இரண்டு நன்மைகள் உண்டாயின. ஒன்று கட்டாயமாக வாயிதா வேண்டியவர்கள் தான் இதற்கு உடன்பட்டு கேட் பார்கள், இரண்டாவது இதனால் வக்கீல்களுக்கு மாத வரும் படி அதிகமாகியது. நான் கோர்ட்டை விட்டு விலகியபின் எனது சிநேகிதர்களான பல வக்கீல்கள் என்னை சந்திக்கும் போது “உங்களுடன் எங்களுக்கு டேகாஸ்ட் வரும்படி அற்றுப் போச்சுது” என்று முறையிட்டிருக்கின்றனர்.

மேற்கண்ட மார்க்கங்களின் மூலமாக வியாஜ்யங்களைத் துரிதமாகத் தீர்மானிக்கும் வழிகண்டபின் தினம் என் கோர்ட் வியாஜ்யங்களை முடித்துவிட்டு முதல் கோர்ட்டிலிருந்து வியாஜ்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:என்_சுயசரிதை.pdf/38&oldid=1123271" இலிருந்து மீள்விக்கப்பட்டது