பக்கம்:என் சுயசரிதை.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38

என் கோர்ட்டுக்கே அனுப்பிவிடும்படி கேட்டுக்கொண்டேன். இச் சந்தர்ப்பங்களில் நான் சீப் ஜட்ஜாக சிலகாலம் ஆக்ட் செய்தபோது நடந்த ஒரு வியவஹாரத்தை இங்கு எழுதுகிறேன். ஒரு நாள் ஐந்தடித்தவுடன் கீழே ஸ்மால்காஸ் கோர்ட் ஆபீசுக்குள் நுழைந்து ஐந்து மணிக்குமேல் வேலை செய்து கொண்டிருந்த குமஸ்தாக்களையெல்லாம் அழைத்து “கவர்மெண்டார் உங்களுக்கெல்லாம் ஐந்து மணி வரையில் வேலை செய்ய சம்பளம் கொடுக்கிறார்களே யொழிய வேறில்லை. ஆகவே நீங்கள் ஐந்தடித்தவுடன் கட்டுக்களைக் கட்டிவிட்டு வீட்டிற்குப் போங்கள். மறு நாள் சரியாக பத்தரை மணிக்கு வந்து விடுங்கள்” என்று சொல்லி எல்லோரையும் வீட்டிற்கனுப்பினேன்.

சின்ன கோர்ட் பெய்லிப்கள் (Bailife) சாதாரணமாக லஞ்சம் வாங்குகிறார்கள் என்பது அனைவரும் அறிந்த விஷயமே இதைத் தடுக்க ஒரு சிறிது நான் முயன்றேன் என்று சொல்ல வேண்டும். ஒருமுறை ஒரு வக்கீல் ஒரு பெய்லிப் லஞ்சம் வாங்கிக்கொண்டு பிரதிவாதியைப் பிடிக்காமலிருக்கிறான் என்று என்னிடம் வந்து முறையிட்டார். நான் மத்தியான போஜனத்திற்காக 2 மணிக்கு என் அறைக்குப் போனவுடன் அந்த பெய்லிப்பை அழைத்து அந்த பிரதிவாதியை சாயங்காலத்திற்குள் பிடித்துக்கொண்டு வரவேண்டுமென்று கண்டிப்பாய் கூறினேன். இதன் பலனாக நான் 3 மணிக்கு கோர்ட்டுக்குப் போகுமுன் அந்த கட்சிக்காரனைப் பிடித்துக்கொண்டு வந்து விட்டான். இம்மாதிரியாக நான் கொஞ்சம் கண்டிப்பாயிருந்ததினால் என் காலத்தில் பெய்லிப்கள் லஞ்சம் வாங்குவதே நின்றுவிட்டது என்று நான் சொல்லவில்லை. ஆயினும் மேல் அதிகாரிகள் கவனித்தால் இவ்வழக்கம் மிகவும் குறையும் என்பது என் அபிப்பிராயம்.

இவ்வாறு நான் கண்டிப்பாய் இருந்தபடியால் வக்கில்கள் பெரும்பாலர்களுடைய அன்பினைப் பெற்றேன் என்று நினைக்கிறேன். நான் எனது 55-வது வயதில் இவ்வேலையினின்றும் விலகியபோது அவர்கள் எனக்கு ஒரு தேநீர் விருந்து கொடுத்தனர். அன்றியும் கோர்ட் சிப்பந்திகளும் பிரத்யேகமாக வேறொரு தேநீர் விருந்து கொடுத்தனர்.

இதற்கிடையில் சில மாதங்கள் சீப் பிரசிடென்சி மாஜிஸ்டிரேட்டாக வேலை பார்க்கும்படி நேரிட்டது. அக்காலமெல்லாம் கோர்ட் வேலையெல்லாம் மத்யானத்திற்குள் முடித்துக்கொண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:என்_சுயசரிதை.pdf/40&oldid=1112839" இலிருந்து மீள்விக்கப்பட்டது