பக்கம்:என் சுயசரிதை.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

39

என் கோர்ட் வீடுபோய் சேர்வேன், ஒரு நாளாவது சாயங்காலத்தில் கோர்ட் வேலை பார்த்ததாக எனக்கு ஞாபகமில்லை. அதுசமயம் இப்போதிருப்பதுபோல், அத்தனை ஆனரெரி மாஜிஸ்டிரேட்டு கோர்ட்டுக்கள் கிடையாது. தற்காலம் இந்த ஆனரெரி கோர்ட்டுக்கள் பல ஏற்படுத்தப்பட்டும் ஐந்து ஸ்டைபென்டியரி (Stipendiary) கோர்ட்டுகளுக்கு என்ன வேலையிருக்கிறதென ஆச்சரியப்படுகிறேன்.

சுமார் 4 வருஷங்கள் நான் ஜட்ஜாயிருந்தபோது ஒரே ஒரு வியாஜ்யத்தில்தான் என் தீர்மானம் ஐகோர்ட்டாரால் மாற்றப்பட்டது என்று எழுத விரும்புகிறேன்.

மேற்கண்டபடி சிவில் கோர்ட்டிலும் கிரிமினல் கோர்ட்டிலும் நான் நியாயாதிபதியாக இருந்திருக்கிறேன். இவ்விரண்டில் சிவில் கோர்ட் ஐட்ஜாயிருந்ததுதான் என் மனதிற்குப் பிடித்தது. ஏனென்றால் ஸ்மால்காஸ் கோர்ட் வியாஜ்யத்தில் என்னையுமறியாதபடி தவறாகத் தீர்மானித்தாலும் வியாஜ்யத்தில் தோற்றக் கட்சிக்காரனுக்கு சொல்ப நஷ்டத்துடன் போகிறது. மாஜிஸ்டிரேட்டாக நான் தவறாக ஒருவனை தண்டித்தால் அவனுடைய வாழ்க்கையே அழிந்தாலும் அழியுமல்லவா?

55 வயதுக்கு மேற்பட்ட சரித்திரம்

1928-ஆம் வருஷம் பிப்ரவரி மாதம் முதல் தேதி முதல் நான் கவர்ன்மெண்ட் வேலையிலிருந்து விலக வேண்டி வரும் என்று முன்பே அறிந்திருந்தபடியால் அதற்காக அது முதல் என் வாழ்நாட்களை எப்படி கழிப்பது என்று ஒரு தினசரிப் பட்டி ஏற்படுத்திக்கொண்டேன். அதை எழுது முன் எனது நண்பர்களில் பலர் நீ ஏன் மறுபடியும் வக்கீலாக பழகலாகாது என்று என்னைக் கேட்டிருக்கின்றனர். அன்றியும் ஜனவரி மாதம் 31-ந்தேதி என் கோர்ட் வேலையை முடித்தவுடன் ஸ்மால்காஸ் கோர்ட் வக்கீல்கள் ஒன்றுகூடி காலஞ்சென்ற எனது நண்பர் பி. எம். சிவஞான முதலியார் மூலமாக என் பிரிவைப்பற்றி ஏதோ உபசார வார்த்தைகளை கூறிய பிறகு “நீங்கள் மறுபடியும் ஹைகோர்ட்’ வக்கீலாக வந்து கலந்து கொண்டால் எங்களுக்குத் திருப்திகரமாயிருக்கும்” என்று கூறியபோது “அப்படி செய்ய எனக்கு இஷ்டமில்லை, நீங்கள் கேட்பதை மறுப்பதற்காக மன்னிக்க வேண்டும்” என்று கூறினேன். அதற்கு முக்கிய காரணம் ஒருமுறை ஜட்ஜா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:என்_சுயசரிதை.pdf/41&oldid=1123272" இலிருந்து மீள்விக்கப்பட்டது