பக்கம்:என் சுயசரிதை.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

44

இறங்கிவந்து நேராக தரிசனம் செய்யட்டும் என்று பதில் உரைத்தேன்.

இவ்விரண்டு விஷயங்களையும் நான் எழுதியது நான் இவ்வாறு செய்துவிட்டேன் என்று ஜம்பமாக சொல்லுவதற் கல்ல. நாம் நம்முடைய மதத்தையும் ஒழுக்கத்தையும் நாமே தாழ்த்திக்கொள்ளலாகாது என்று எனது நண்பர்களுக்குத் தெரிவிக்கும் பொருட்டே.

மற்றொருதரம் சென்னை முனிசிபல் சேர்மன் (Municipal chairman) ஆக இருந்த ஒரு ஆங்கிலேயர் இரண்டு குதிரைகள் பூட்டிய வண்டியில் பிராடிஸ் ரோடு வழியாக அடையாறு கிளப்புக்குப் போய்கொண்டிருந்தபொழுது எதிரில் பஞ்ச மூர்த்திகள் வர பெரும்கும்பலாய் இருந்தபடியால் தான் போவதற்கு இடைஞ்சலாய் இருக்கிறதென்று சொல்லி ஸ்வாமிகளை ஒருபுறம் ஒதுக்கும்படி கேட்டனுப்பினார். அதற்கு நான் மனிதனுக்காக தெய்வத்தை ஒதுங்கச்செய்வது ஒழுங்கல்ல, தெய்வத்திற்காக மனிதன் தான் ஒதுங்கிப் போகவேண்டும் என்று சொல்லி அனுப்பினேன். அதன்பேரில் இந்த அதனப்பிரசங்கி பதில் யார் சொன்னது என்று விசாரிக்க, அருகிலிருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் என் பெயரைச் சொல்லி அவர் பிடிவாதக்காரர் என்று சொன்னாராம். அதன் மேல் அந்த ஐரோப்பியர் தன் வண்டியை பக்கத்து வீதி வழியாக சுற்றிக்கொண்டு சென்றனராம். நம்மிடத்தில் தவறில்லாத போது நாம் ஒருவருக்கும் பயப்படவேண்டியதில்லை என்பது என் அபிப்பிராயம்.

1924-ஆம் வருஷம் எனக்கு சிறிய கோர்ட் ஜட்ஜ் வேலை யானபோது ‘உன் கோர்ட்டிலேயே ஏதாவது கோயில் வியவ ஹாரங்கள் தீர்ப்புக்கு வரலாம். ஆகவே நீ கோயில் தர்மகர்த்தா வேலையை விட்டு விலகிக்கொள்வது நியாயம்’ என்று சர் சி. பி. ராமஸ்வாமி ஐயர் அவர்கள் சொன்னதின்பேரில் அரை மனதுடன் மயிலை கபாலீஸ்வரர் கோயில் தர்மகர்த்தா வேலையினுன்றும் விலகினேன்.

நான் எந்த கட்சியையும் சேராதது

சென்னையில் பல கட்சிகள் உண்டு என்பதை எல்லோரும் அறிந்த விஷயமே. முக்கியமாக காட்கிரஸ் கட்சி, ஜஸ்டிஸ் கட்சி என்று இரண்டு பெரிய கட்சிகளைப் பற்றி அறியாதோர். கிடையாதல்லவா? இவைகளைப்பற்றிய என்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:என்_சுயசரிதை.pdf/46&oldid=1112843" இலிருந்து மீள்விக்கப்பட்டது