பக்கம்:என் சுயசரிதை.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

51

தமிழ் பேசும் படம்:-- இதை 1937-ஆம் வருஷம் அச்சிட் டேன்.

பேசும் பட அனுபவங்கள்:-- இதை 1938-ஆம் வருஷம் அச்சிட்டேன்.

கதைகள் வியாசங்கள் முதலியன:-- (1) தீட்சிதர் கதைகள் (2) ஹாஸ்ய வியாசங்கள் (3) சிறு கதைகள் (4) ஹாஸ்யக் கதைகள் (5) கதம்பம் இக் கதைகள் எல்லாம் பெரும்பாலும் சுதேசமித்திரன், ஆனந்த விகடன் முதலிய பத்திரிகைக்களுக்காக எழுதியவைகளாம்.

மத சம்பந்தமான நூல்கள்

சிவாலயங்கள் இந்தியாவிலும் அப்பாலும்:-- சிறு வயது முதல் ‘சிவாலய பயித்தியம்’ எனக்குண்டு. ஏறக்குறைய 4000 சிவாலயங்களைப் பற்றி பல ஆண்டுகளாக தொடுத்து 1945-ஆம் வருடம் முதல் 4 பாகங்களை அச்சிட்டேன். 5 ஆம் பாகம் 1948-ஆம் வருஷம் அச்சிடப்பட்டது.

சிவாலய சிற்பங்கள்:-- இதை 1946-ஆம் வருஷம் அச்சிட் டேன். இதை அச்சிடுவதில் தமிழ் மொழிக்காக எப்பொழுதும் உதவி செய்து வரும் ஸ்ரீலஸ்ரீ காசி அருணா நந்தித் தம்பிரான் ஸ்வாமிகள், திருப்பனன் தாள் ஆதினம் பண்டார சந்நிதி அவர்கள் ரூபாய் 500 பொருளுதவி செய்தார்கள். இந்நன்றியை நான் என்றும் மறக்க முடியாது.

சுப்பிரமணியர் ஆலயங்கள்:-- இந்நூலை சிவாலயங்களி னின்றும் வேறாக அச்சிட்டதற்குக் காரணம் இந்நூல் முகவு ரையில் எழுதியுள்ளேன். இம் மூன்றையும் படங்களுடன் அச்சிடாதது பெருங்குறையாம். இக்குறை என் ஆயுள் முடியு முன் இறைவன் அருள் நிறைவேற்றி வைக்குமாக.

மேற்சொன்ன நூல்களன்றி நான் அச்சிட்ட நூல்கள்

1. காலக் குறிப்புகள்:-- நான் சிறு எழுத்தாள்னாக வேண்டுமென்று தீர்மானித்த பிறகு எனக்கு உபயோகப்படும் படியான பல காலக் குறிப்புகளை குறித்து வந்தேன். அவைகள் மற்ற நூலாசிரியர்களுக்கும் உபயோகப்படும் என்று நினைத்து 1947-ஆம் வருஷம் அச்சிட்டேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:என்_சுயசரிதை.pdf/53&oldid=1112846" இலிருந்து மீள்விக்கப்பட்டது