பக்கம்:என் சுயசரிதை.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

53

யாம். எனக்கு நாற்பதாய் வயதில் மனிதர்களுக்கு வரும் சாலேஸ்வரம் வரவேயில்லை. நான் அச்சிடும் புஸ்தகங்களின் Proof பிழை திருத்தங்களை சரியாக கவனிக்க அசத்தனாய் இருக்கிறேன். சென்ற சில வருடங்களாக வெளிவரும் என் நூல்களில் பல அச்சுப் பிழைகள் குடி கொண்டிருக்கின்றன என்பதற்கு சந்தேகமில்லை.

பேசும் படங்களில் நான் பங்கெடுத்துக் கொண்டது

1931-ஆம் வருடம்தான் என் முதிர் வயதில் பேசும் படங்களில் பங்கெடுத்துக்கொள்ள ஆரம்பித்தேன். நான் கல்கத்தாவுக்குப் போய் நான் எழுதிய ‘சதி சுலோசனா’ என்னும் நாடகத்தை பேசும் படமாக தயாரித்தது. பிறகு 1936-ஆம் வருடம் பம்பாய்க்குப்போய் என் ‘மனோகரா’ என்னும் பேசும் படத்தில் புருஷோத்தமனாக நடித்தது. இதற்கிடையில் ஏழு வருடம் பேசும் படத்தின் சென்சார் போர்டில் ஒரு அங்கத்தினனாக கவர்ன்மெண்டாரால் ஏற்படுத்தப்பட்டு வேலை பார்த்தது முதலிய விஷயங்களைப்பற்றி என்னுடைய ‘பேசும் பட அனுபவங்கள்’ என்னும் சிறிய புத்தகத்தில் விரிவாக எழுதியிருக்கிறேன். ஆகவே இங்கு, அவைகளைப் பற்றி எழுதுவது அவசியமில்லை என்று விடுத்தேன். அவ்விஷயங்களைப்பற்றி அறிய விரும்பும் என் நண்பர்கள் அந்நூலைப் படித்து தெரிந்து கொள்வார்களாக. இதுவரையில் அடியிற் கண்ட எனது நாடகங்கள் திரைப்படங்களாக மாற்றப்பட்டிருக்கின்றன. (1) காலவரிஷி (2) ரத்னாவளி (3) மனோகரா ( இரண்டு முறை) (4) லீலாவதி சுலோசனா (5) வேதாள உலகம் (5) சதிசுலோசனா (7) சந்திரஹரி (8) சபாபதி (9) பொங்கல் பண்டிகை (10) ராமலிங்க சுவாமிகள் (இது அச்சிடப்படாத நாடகம்).

புத்தகங்களை எழுதி அச்சிட்டது போக நான் எழுத்தாளனாக செய்த சில காரியங்களை இனி எழுதுகிறேன். சென்ற சுமார் 20 வருடங்களாக ஹிந்து (Hindu) பத்திரிகைக்கு ஆங்கிலத்திலும், சுதேசமித்திரன், ஆனந்தவிகடன் முதலிய தமிழ் பத்திரிகைகளுக்கு தமிழிலும் சிறுசிறு வியாசங்கள் எழுதியனுப்பியிருக்கிறேன். இதன்மூலமாக எனக்கு வருவாயும் உண்டு.

பேசும் படங்களுக்கு சில நாடகங்களை எழுதியிருக்கிறேன். இவைகளன்றி பேசும் படங்களுக்கென்றே இதுவரையில் நான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:என்_சுயசரிதை.pdf/55&oldid=1112848" இலிருந்து மீள்விக்கப்பட்டது