பக்கம்:என் சுயசரிதை.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

57

மாதம் அண்ணாமலை நகருக்குப் போய் நாடகக் கலையைப்பற்றி சொற்பொழிவுகள் செய்தேன்.

1945-ஆம் வருஷம் சென்னையில் ஸ்தாபிக்கப்பட்ட இந்து மது விலக்கு சங்கத்தின் பொன் விழாவில் வினோத வேஷப் போட்டியில் வேஷம் தரித்து வெள்ளிப் பதக்கம் பரிசு பெற்றேன். அன்றியும் இவ்வருஷம் மார்ச் மாதத்தில் 31-ந் தேதியிலும் ஏப்ரல் 1-ந்தேதியிலும் தஞ்சை மா நகரில் நடந்த இரண்டாவது நாடகத் தமிழ் மகாநாட்டில் தலைமை வகித்து தலைவர் உரையாக தமிழ் நாடகத்தைப்பற்றி சொற்பொழிவு செய்தேன். இவ்வருஷம் சவுத் இண்டியன் ஆத்லெடிக் அசோசியேஷன் கொண்டாட்டத்தில் வினோத வேஷம் போட்டியில் வேஷம் தரித்து பரிசு பெற்றேன். இவ்வருஷம் சுகுண விலாச சபையின் தசரா கொண்டாட்டத்தில் ‘மருமகன்’ என்னும் தமிழ் பிரஹசனத்தில் மருமகனுடைய குமாஸ்தா. வேஷம் தரித்தேன். மேலும் இச்சமயம் நடந்த ஹிந்தி நாடகத்தில் பெய்லிப் (Bailiff) ஆகவும் போலீஸ் இன்ஸ்பெக்டராகவும் வேஷம் பூண்டேன். மேற்கண்ட பல சிறு வேஷங்கள் தரித்து நான் நடித்தது. அவைகளில் பெயர் எடுக்கவேண்டுமென்றல்ல. நாடகக் கலையின் சம்பந்தத்தை முதிர் வயதிலும் விட்டுப் பிரிய மனமில்லாமையே ஆகும்,

இவ்வருஷம் ரேடியோ நாடகங்களில் நான்கு முறை பாகம் எடுத்துக்கொண்டேன். அந்நான்கு நாடகங்களும் நான் எழுதிய “சங்கீதப் பயித்தியம், ரஜபுத்ர வீரன், மாண்டவர் மீண்டது, இடைச்சுவர் இருபுறமும்” என்பவைகளாம். இவைகளில் நான் நடித்தது எனக்கு ஒரு கஷ்டமும் தரவில்லை. வேஷம் போடாமலே பேசவேண்டிவந்தமையால், ஆயினும் மற்ற நடிகர்களுக்கெல்லாம் ஒத்திகை செய்யவேண்டியவனாய் இருந்தேன். இவ்வருஷத்திற்கு முன்பாக ஊர்வசியின் சாபம், லீலாவதி சுலோசனா, சபாபதி முதலிய ரேடியோ நாடகங்களில் நடித்தேன். இவ்வருஷத்திலும் இதற்கு முன்பாகவும் நாடக விஷயங்களைப்பற்றி பன்முறை ரேடியோ மூலமாக பேசி யிருக்கிறேன்.

இவ் வருஷம் சென்னையிலுள்ள ரோடெரி கிளப்பார் இந்திய ‘நாடக மேடை'என்னும் விஷயத்தைப்பற்றி பேசும் படி கேட்க, அதற்கிசைந்து அவர்கள் பெரும்பாலோர் ஆங்கிலமே தெரிந்திருந்தபடியால் ஆங்கிலத்தில் சொற்பொழிவு செய்யும்படி நேர்ந்தது. இவ்வருஷம் டிசம்பர் மாதம் நான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:என்_சுயசரிதை.pdf/59&oldid=1112851" இலிருந்து மீள்விக்கப்பட்டது