பக்கம்:என் சுயசரிதை.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

59

கொண்டாட்டத்தில் ஹாஸ்ய பாட்டுப் போட்டியில் ஒரு பரிசு பெற்றேன். இப்பாட்டு தமிழ், தெலுங்கு, ஆங்கிலம் ஆகிய மூன்றும் கலந்ததாகும். இதே பாட்டைப் பாடி பல வருடங் களுக்குமுன் சுகுண விலாச சபையார் எற்படுத்திய வினோத வேஷப் பார்ட்டியில் அமெரிக்காவிலிருந்து அதை காண வந்த லிவர் பிரதர்ஸ் கொடுத்த இரண்டு பரிசுகளில் ஒன்றை பெற்றது எனக்கு ஞாபகமிருக்கிறது. 1949-ஆம் வருஷம் பச்சையப்பன் கல்லூரியில் நூற்றாண்டு கொண்டாட்டத்தில் ஒரு நாள் நடத்திய சபாபதி நாடகத்தின் நான்காம் பாகத்தில் வேலைக்கார சபாபதியாக நடித்தேன்.

20-2---1949-இல் புரொக்ரெசிவ் யூனியன் பள்ளி மாணவர்கள் எனது மனோகரன் நாடகத்தை ஸென்மேரிஸ் ஹாலில் ஆடியபோது தலைமை வகித்து சிறுவர்கள் ஆடிய நாடகத்தைத் தக்கபடி புகழ்ந்துரைத்தேன்.

13--3--49 விக்டோரியா பப்ளிக் ஹாலில் இன்று ‘தோட்டக்காரன்’ எனும் ஓர் சமூக நாடகத்தில் செட்டியாராக நடித்தேன். நடித்தது எனக்கு திருப்தியாயிருந்தது. விக்டோரியா பப்ளிக் ஹாலில் இதற்கு முன்பாக 10 வருடங்களுக்கு முன் நடித்தது.

24-4-49, அன்று விக்டோரியா பப்ளிக் ஹாலில் சுகுண விலாச சபையார் எனது நாடகமாகிய ‘சந்திரஹரி'யை நடத்தினார்கள். அப்பொழுது அதில் நடித்த முக்கிய நடிகர்களின் வேண்டுகோளின்படி மூன்றாவது காட்சியில் சந்திரஹரி அரசன் தர்பாரில் ஓர் சேவகனாக நடித்தேன்.

14-8-49-இல் சென்னை சிவனடியார் திருக்கூட்டம் முதலிய ஹிந்துமத சம்பந்தமானவைகளுக்காக ராயபுரம் நாடக சபையார்கள் விக்டோரியா பப்ளிக் ஹாலில் ‘நந்தன் சாம்பன்’ என்னும் தமிழ் நாடகத்தை நடத்தியபோது தலைமை வகித்தேன்.

இவ்வருஷம் செப்டம்பர் மாதம் சென்னை தமிழ் வளர்ச்சிக் கழகத்தார் சிறந்த நாடகங்களுக்கு பரிசு அளிப்பதற்காக ஏற்படுத்திய நாடகப் போட்டியில் அவர்களுக்கு அனுப்பப்பட்ட 13 நாடகங்களை பரிசோதித்து சிறந்த நாடகத்தை தேர்ந்தெடுப்பதற்காக என்னை பரிசோதகனாக ஏற்படுத்திய காரியத்தை செப்டம்பர் 20-ந்தேதிக்குள் முடித்தேன்.

1949-டிசம்பர் 30-ந்தேதி சென்னபுரி ஆந்திர மகாசபை நடத்திய ‘நாடக கலா பரிஷ'த்தில் இரண்டாம் நாள் விக்டோ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:என்_சுயசரிதை.pdf/61&oldid=1123277" இலிருந்து மீள்விக்கப்பட்டது