பக்கம்:என் சுயசரிதை.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

64

அபிவிருத்தி செய்வதற்காகவும் வருடந்தோறும் டிசம்பர் மாதம் பீபில்ஸ் பார்க் (People's Park) வேடிக்கை விநோதங்களை நடத்தவும் ரேக்ளா முதலிய பந்தயங்களை நடத்தவும் 1903-ஆம் வருஷம் சென்னை வாசிகள் சிலரால் எற்படுத்தப்பட்டது. அதில் நான் ஒருவனாய் இருந்தேன். அதுமுதல் பல வருடங்கள் கமிட்டி அங்கத்தினனாகவும் சில வருடங்கள் உபதலைவனாகவும் இருந்து அதன் காரியங்களைப் பார்த்துவந்தேன். தேகப் பயிற்சிக்கும் வியாயாமத்திற்கும் ஏற்படுத்தப்பட்ட இச்சபையின் தொடர்பை விடலாகாதென்றும், இப்போது என் முதிர் வயதிலும் அங்கத்தினனாக இருக்கிறேன்.

கல்வித் துறைக்காக உழைத்தது

சென்னை பல்கலை கழகத்தில் (University) நான் தமிழ் பாஷையின் சார்பாக ஒரு செனெட் அங்கத்தினனாக பிரிட்டிஷ் ராஜாங்கத்தாரால் நியமிக்கப்பட்டு சில வருடங்கள் உழைத்து வந்தேன். அன்றியும் சிதம்பரம் அண்ணாமலை பல்கலை கழகத்தில் ஒரு அங்கத்தினனாக காலஞ்சென்ற ராஜா சர். அண்ணாமலை செட்டியாரால் நியமிக்கப்பட்டு சில வருடங்கள் அதன் வேலையில் கலந்து கொண்டேன். அண்ணாமலை நகரில் பன்முறை நாடகங்களைப்பற்றி சொற்பொழிவு செய்தேன்.

மேலும் ‘சென்னை ஸ்கூல் புக் லிட்ரெச்சர் சொசைடி’ என்னும் சங்கத்தில் ஒரு கமிட்டி அங்கத்தினாக பல் வருடங்களாக தமிழ் அபிவிருத்திக்காக உழைத்து வருகிறேன். இச் சபையானது நான் பிறப்பதற்கு முன்பாக என் தகப்பனார் முதலிய பல சென்னை வாசிகளால் ஏற்படுத்தப்பட்டதாம்.

சென்னபுரி அன்னதான சமாஜத்தில்
பங்கெடுத்துக் கொண்டது

இந்த தர்ம சமாஜத்தில் பல வருடங்களாக கமிட்டி அங்கத்தினனாக உழைத்துவந்தேன். இந்த சமாஜத்துக்கு ரூபாய் 1000 கொடுத்து என் தகப்பனார் தாயார் திதிகளில் ஏழைகளுக்கு உணவு கொடுக்கும்படியாக ஏற்பாடு செய்தேன்.

கிழ வயது

ஹிந்துக்களாகிய நம்முள் ஒருவனுக்கு சஷ்டிபூர்த்தி ஆனவுடன் அதாவது 60 ஆண்டு முடிந்தவுடன் கிழவன் என எண்ணப்படுகிறான். பைபிள் என்னும் கிறிஸ்தவ சிறந்த மத

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:என்_சுயசரிதை.pdf/66&oldid=1112857" இலிருந்து மீள்விக்கப்பட்டது