பக்கம்:என் சுயசரிதை.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

67

நாள் காலை நான் விழித்தவுடன் என் புத்தியில் ஹோமர் (Homer) என்றும் கிரேக்க ஆசிரியர் பிறவிக் குருடர் எப்படி பெருங் காவியங்களை எழுதினார் ? மில்டன் (Milton) என்னும் பெயர் பெற்ற ஆங்கில நூலாசிரியர் தன் கண் பார்வை முற்றிலும் இழந்தபின் ‘Paradise lost’ என்னும் கிரந்தத்தை எப்படி எழுதினார்? அந்தகக் கவி வீரராகவ முதலியார் ராமாயண கீர்த்தனையை எப்படி எழுதினார்? அவர்கள் செய்தபடி நாம் என் செய்யலாகாது? என்னும் எண்ணம் உதிக்க, உடனே எனக்கு வழிகாட்டியத் தெய்வங்களை துதித்துவிட்டு அவர்கள் செய்தவாறே நாமும் செய்வோம் என்று தீர்மானித்தேன். அன்றைத் தினம் போஜனத்திற்கு மேல் என் பேத்திகளுள் ஒருத்தியை அழைத்து நான் எழுதவேண்டுமென்று உத்தேசித்திருந்த ஒரு சிறு கட்டுரையை கொஞ்சம் கொஞ்சமாக சொல்லி அவளை எழுதிவரச் சொன்னேன். இப்படி செய்வது ஆரம்பத்தில் எனக்கு மிகவும் கஷ்டமாய்த்தான் இருந்தது. ஆயினும் பத்துப் பதினைந்து நாட்கள் கழித்தவுடன் சகஜமாய்போய் சுல்பமாகிவிட்டது. அதுமுதல் இதுவரைக்கும் நான் எழுதி அச்சிட்டு வந்த நாடகங்கள், கதைகள் முதலியனவெல்லாம். இவ்வாறு தான் வெளியிடப்பட்டன. அச்சிட வேண்டிய புஸ்தகங்களின் ப்ரூப்கள் (Proof) வந்தால் அவளை படிக்கச் சொல்லி திருத்திக்கொண்டு வந்தேன். ஆயினும் இப்படி செய்வதில் பல எழுத்துப் பிழைகள் திருத்தப்படாமல் புஸ்தகங்களில் இருக்கின்றன என்பதற்கு ஐயமில்லை. என் கண் பார்வை மிகவும் குறைந்துபோய் என் பேரன் பேத்திகளுக்குச் சொல்லி அச்சிட்ட புஸ்தகங்கள்:- இல்லறமும் துறவறமும் (1952) சபாபதி முதலியாரும் பேசும் படமும் (1954) நான் குற்றவாளி (1954) நீண்ட ஆயுளும் தேக ஆரோக்கியமும் (1955) தமிழ் அன்னை பிறந்து வளர்ந்த கதை 2 பாகங்கள் (1957) பலவகைப் பூங்கொத்து {1958).

தினசரி பட்டி

1928-வது வருடம் நான் நீதிபதி வேலையினின்றும். விலகின பிறகு அநேக நண்பர்கள் “உங்கள் நாட்களை எப்படி கழிக்கிறீர்கள்” என்று கேட்டிருக்கின்றனர். இது ஒரு முக்கியமான கேள்வியாம். அநேக உத்யோகஸ்தர்கள் பென்ஷன் (Pension) வாங்கிக்கொண்ட பிறகு தங்கள் காலத்தை எப்படி கழிப்பது என்று திகைத்திருக்கின்றனர். காலத்தை சரியாக கழிக்கத் தெரியாமல் வீட்டிலேயே மூன்று வேளை சாப்பிட்டு விட்டு மூச்சு விட்டுக்கொண்டிருந்தால் அது ஒருவன் உடல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:என்_சுயசரிதை.pdf/69&oldid=1112860" இலிருந்து மீள்விக்கப்பட்டது