பக்கம்:என் சுயசரிதை.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பேன். 8 மணிக்குள் வீடு திரும்பி விடுவேன். இரவு பூஜையை முடித்துக் கொண்டு 9 மணிக்குள் சாப்பிட்டு விட்டு உறங்கப் போவேன்.

மேற்சொன்ன தினசரி நடவடிக்கைகள் என் கண் பார்வை சுமாராய் இருந்த போது; பிறகு என் கண் பார்வை முற்றிலும் குறைந்த போது அந்த நடவடிக்கைகளில் சிலவற்றை மாற்றிக் கொள்ள வேண்டியதாயிற்று. (1) காலையில் 9 மணி முதல் 11 மணி வரையில் என் பேரன் ஒருவனை ஆங்கிலத்தில் படிக்கச் சொல்லி கேட்டு வருவேன் அல்லது அவனுக்கு ஆங்கில பாடம் கற்பிப்பேன். (2) 2 மணி முதல் 4 மணி வரையில் நான் காலையில் யோசித்திருந்த நாடகத்தையோ, கதையையோ, கட்டுரையையோ என் பேத்தி ஒருத்திக்குச் சொல்ல, அவளை எழுதிக் கொள்ளச் சொல்வேன். (3) சாயங்காலம் வெளியில் போகாதவனாய் வீட்டிலேயே 6 மணி வரையில் உலாவி வியாயாமம் எடுத்துக் கொள்வேன். (4) 6 மணி முதல் 7½ மணி வரை என் சிறிய பேரனை படிக்கச் சொல்லி தமிழ் பாடம் கற்பிப்பேன். புதன் கிழமைகளில் மாத்திரம் மது விலக்கு சங்கத்திற்கு ஒரு ரிக்ஷாவில் மற்றவர்கள் உதவியினால் ஏறிக்கொண்டு போய் வருவேன்.

நான் வணங்கும் தெய்வத்தின் கருணையினால்
பெற்ற மரியாதைகள்

(1) என்னுடைய 81-ஆம் பிறந்த நாளில் சென்னையிலுள்ள ஏறக்குறைய எல்லா நடிகர்களும் நான் எதிர் பாராத படியான ஒரு பெரிய விழாவைக் கொண்டாடினர். (2) என்னுடைய 85 வயது பூர்த்தியானதும் சென்னை நகராண்மை கழகத்தார் எனக்கு பெரிய மரியாதையை செய்தார்கள். (3} சென்னை மாநில சங்கீத நாடக சபையார் பாராட்டு விழாக் கொண்டாடினர்.(4) இவ்வருடம் (1957) சென்னை அரசியலார் தாங்கள் நடத்திய நமது நாட்டின் நூறாவது விடுதலை விழாவை நடத்திய போது எனக்குப் பெரிய பரிசுகள் அளித்தனர். (5) நான் படித்த மாகாணக் கல்லூரி பாராட்டு விழா ஒன்றை நடத்தியது. (6) நான் படித்த பச்சையப்பன் கல்லூரி ஓர் பெரும் பாராட்டு விழாவை நடத்தியது. (7) சுகுண விலாச சபையார் ஓர் பெரும் கொண்டாட்டத்தை நடத்தி மரியாதை செய்தனர். இன்னும் மது விலக்கு சங்கம், கபாலீஸ்வரர் கோயில் அதிகாரிகள், சில நடிகர் சங்கங்கள் பிரத்யேகமாக மரியாதை செய்தார்கள். மேற் சொன்ன பல

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:என்_சுயசரிதை.pdf/71&oldid=1112724" இலிருந்து மீள்விக்கப்பட்டது