பக்கம்:என் சுயசரிதை.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

யும் 1- மணி சாவகாசம் பொறுத்து வந்தாராம். வந்தவர் என் தகப்பனார் சரியாக வந்ததற்காக அவரை, மிகவும் சிலாகித்துப் பேசினாராம். இதை அப்பள்ளிக்கூடத்து உபாத்தியாயர் ஒருவரே பிறகு எனக்குத் தெரிவித்தார். சாதாரணமாக நம் தேசத்தவர்கள் இதை சரியாக கவனிப்பதே இல்லை. வெள்ளைக் காரர்கள் பெரும்பாலும் இதை மிகவும் கவனிப்பார்கள். இவ்விஷயத்தில் எனக்கு இரண்டாவது போதகாச்சாரியார் சின்ன கோர்ட் நீதிபதியாயிருந்த மிஸ்டர் ரோஜேரியோ (Mr. Rozario) அவர் கோர்ட்டுக்குச் சரியாக 11-மணி அடிக்கும்போது வந்து உட்காருவார். அவர் முன்பாக நான் 4 வருஷம் வக்கீலாக பழகினேன். அவர் ஒரு நாளும் இதில் தவறியதில்லை. இதைக் கடைப்பிடித்தே நானும் அதே கோர்ட்டில் பிறகு நீதிபதியாய் இருந்தகாலமெல்லாம் சரியாக 11-மணிக்கு வந்து வேலை ஆரம்பிப்பேன். இதைப்பற்றி என்னுடைய சிநேகிதர்களாகிய வக்கீல்கள் “கடிகாரம் தப்பினாலும் தப்பும் இவர் தப்பமாட்டார்” என்று கூறியதை நான் என்முறை கேட்டிருக்கிறேன். நம்மவர்கள் இந்தமுறை ஏன் பின்பற்றுவதில்லை என்று எனக்கு ஆச்சரியமாகவே யிருக்கிறது. நம்மவர்கள் கல்யாணங்களுக்கு லக்னம் வைத்தால் அதில் தவறுகிறார்களா. அல்லது ரெயிலுக்கு போவதென்றால் இரண்டு நிமிஷம் தவறிப்போகிறார்களா? இவ்விஷயத்தில் மேற்சொன்ன ரொஜோரியோ எனக்குக் கூறிய ஒரு வாக்கியம் ஞாபகம் வருகிறது. அதாவது “சம்பந்தம், காலக்கிரமப்படி வருவது எனக்குக் கஷ்டமாயில்லை. காலம் தவறி நடத்தல்தான் எனக்கு பெரும் கஷ்டமாயிருக்கிறது” என்பதாம். இதை வாசிக்கும் எனது இளைய நண்பர்களாவது வெள்ளையர்களைப் போல் தாங்களும் எவ்விஷயத்திலும் குறித்தகாலக் கிரமப்படி நடக்க கற்றுக்கொள்வார்களாக!

என் தாய் தந்தையர்கள் போதித்த நீதிகள்

(1) “கண்ணே பயப்படாதே,” இந்த இரண்டு பதங்கள்தான் என் தாயார் எனக்குக் கூறிய கடைசி வார்த்தைகள். அவைகளுக்கு நான் செய்யும் வியாக்கியானம் என்ன வென்றால் “என்ன இடுக்கண் நேர்ந்தபோதிலும் தைரியத்தைக் கைவிடாதே, தெய்வத்தை நம்பியிரு” என்பதாம். (2)எல்லோரையும் சந்தோஷிப்பித்து நீ சந்தோஷமாயிரு. (3) உண்மையே எப்பொழுதும் பேசு. அப்படி பேசுவதனால் யாருக்காவது மன வருத்தம் உண்டாகும் என்று தோன்றினால் மௌனமாயிருந்துவிடு (4) கடுகடுத்துப் பேசாதே. இனிமை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:என்_சுயசரிதை.pdf/76&oldid=1123281" இலிருந்து மீள்விக்கப்பட்டது