பக்கம்:என் பார்வையில் கலைஞர்.pdf/10

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

VIII


அப்பொழுது ஒருவரையொருவர் அறிமுகம் செய்து கொண்டார்கள், அப்பொழுது சமுத்திரம் கேட்கிறார் “இப்படி ஆகி விட்டாயே நானும் வேறு ஒருத்தியை திருமணம் செய்து கொண்டு விட்டேன். ஆனால் நான் உன்னைக் கேட்கிறேன், நீ அப்பொழுது என்னை காதலிச்சாயா’ என்று அப்படி தேய்ந்து போன அந்தக் கட்டையைப் பார்த்து நீ என்னைக் காதலிச்சாயா என்ற போது, அந்தப் பெண் அப்போதும் ‘நல்லா கேட்ட, ஒரு கேள்வி’ (பலத்த சிரிப்பு) என்றாள். இதுதான் சமுத்திரத்தின் இலக்கிய நயம். இதை வைத்தே ஒரு கதை எழுதினேன் என்று அவர் குறிப்பிடுகிறார்.

மரணச்சுவை

இன்னொன்று. மரண முகத்திலே கூட அந்த நிகழ்வை வைத்து எழுத்தோவியம் தீட்டும்போதுகூட எப்படி நகைச்சுவை மின்னலிடுகிறது. மின்னிப் பளிச்சிடுகிறது என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு. தன்னைப் பற்றிக் குறிப்பிடுகிறார்.

“சென்னை மயிலையில் வாழும் மாமுனிவர் குருஜி சுந்தர சுவாமிகளை, நானும் என் துணைவியும் மருத்துவமனைக்கு போய்விட்டு வரும் வழியில், பார்த்தோம். நான், மரண விளிம்பில் இருக்கும் ஒரு நோயாளியாகி, அவரை நோக்கினேன். காலை 8 மணிக்கு பத்மாசனம் போட்டு இரவு 8 மணி வரை அப்படியே அமர்ந்திருக்கும் அந்த எண்பது வயது முனிவர் எனக்கு ஆதரவு கூறியதோடு, ஒரு எலுமிச்சைப் பழத்தையும் கொடுத்து “இது சுருங்கச் சுருங்க உன் நோயும் போய்விடும்” என்றார்.

எனக்கு, அது ஒரு பெரிய மனோதிடத்தைக் கொடுத்தது. நான் படுத்துவிட்டால் இலக்கிய உலகமே துடித்துப் போகுமே என்று நினைத்தேன். சென்னை வானொலி நிலைய செய்திப் பிரிவே இயங்காது, என்ற மாய எண்ணம் எழுந்தது. அந்த மாதிரி எந்தப் பிரளயமும் ஏற்படவில்லை . ஒருவேளை, நான் மடிந்திருந்தால், ஒரு சினிமா நடிகையின் கல்யாண செய்திக்குக் கீழே ஒரு சின்னச் செய்தி என்னைப் பற்றி வரலாம். அதுவும் எனக்கு சலுகை காட்டுவது போல

எப்படி உள்ளத்தை தொடக்கூடிய இந்த எழுத்து ஆழம் அமைந்திருக்கிறதென்பதற்காகத் தான் இதை நான் படித்துக் காட்டினேன். அதாவது ஒரு எழுத்தாளனின் மரணம் என்பது அவ்வளவு மலிவாகிவிட்டது. ஏனென்றால் பாரதியாரின் வாரிசு என்றும், பாரதியாரை “நீடுதுயில் நீக்க பாடி வந்த நிலா” என்றும் பாராட்டிய புரட்சிக் கவிஞன் பாரதிதாசன் மரணமடைந்த போது,