பக்கம்:என் பார்வையில் கலைஞர்.pdf/113

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

112

என் பார்வையில் கலைஞர்



இப்போது தி.க.சி அவர்கள் திராவிட இலக்கியத்தை, குறிப்பாக கலைஞரின் படைப்புகளை மறு வாசிப்பு செய்து, இலக்கியத்தில் கலைஞருக்கு உரிய மகத்தான இடத்தைக் கண்டு பிடித்து விட்டார் என்பதை அவர் எனக்கு எழுதும் கடிதங்கள் கூறுகின்றன. சரி போகட்டும். இதனால் கலைஞர் இலக்கியவாதி இல்லை என்று ஆகி விடாது. கொல்லர் தெருவில் ஊசி விற்கவேண்டியது இல்லை. அவரது தென்பாண்டிச் சிங்கம், பொன்னர், சங்கர் நாவல்களும், குப்பைத் தொட்டி, அணில் குஞ்சு போன்ற சிறுகதைகளும் எதிர்காலத் தமிழ் இலக்கியத்தில் அவரை அடையாளப்படுத்திக் கொண்டே இருக்கும். எனவே, பேரவை விவகாரத்திற்கு வருவோம்.

சம்பந்தப்பட்ட அந்தப் பேரவை உறுப்பினர், சென்னை வானொலி மீது உரிமைப் பிரச்னை எழுப்பினார். அவர் அப்படிப் பேசவில்லையாம். வானொலி, தான் வேண்டுமென்றே அப்படி ஒலி பரப்பியதாம். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. பத்திரிகையாளர் மாடத்தில், கலைஞருக்கு எதிரான செய்தியாளர்கள் கூட அந்த உறுப்பினர் அப்படிப் பேசியதைக் கடுமையாகக் கண்டித்து, தங்களுக்குள் பேசிக் கொண்டார்கள்.

இந்த உரிமைப் பிரச்னையை எதிர் நோக்குவதற்காக, வழக்கப்படி பேரவைத் தலைவர் சேடப்பட்டி முத்தையா அவர்களுக்கு, வழக்கத்திற்கும் அதிகமான செய்தியை அவர் தலைக்கு மேல் சுற்றும் ஒளி வட்டமாய்ப் போட்டு விட்டு, மறுநாள் அவரைச் சந்தித்தேன். அவர் சிறிது காலம், முரசொலியிலும் பணியாற்றியதாகக் கேள்விப் பட்டேன். அவரை அவரது அறையில் சந்தித்த நான் ‘கனிமொழி உங்களுக்கும் எனக்கும் மகளல்லவா? நீங்கள் அப்போதே கண்டித்திருக்க வேண்டாமா?' என்று கேட்டேன். அவரும், அந்த உறுப்பினர் அப்படிப் பேசியிருக்கக் கூடாது என்று கருத்துத் தெரிவித்தார். அவர் உரிமைப் பிரச்சினையை, உரிமையற்றுப் போகச் செய்து விட்டதில் மகிழ்ச்சி.

சென்னை வானொலி மட்டும் அப்படி ஒரு செய்தி போடவில்லை என்றால். செல்வி ஜெயலலிதாவை மகிழ்விக்க வேண்டும் என்று நினைத்தோ என்னமோ, சின்னத்தனமாக பேசிய அந்த உறுப்பினர், தான் அப்படிப் பேசவில்லை என்று சொல்லியிருக்க மாட்டார். பேரவை நடவடிக்கைக் குறிப்பேட்டில் மேலேழுந்த வாரியாகப் பார்த்தால் அப்பாவித்தனமாகத்