பக்கம்:என் பார்வையில் கலைஞர்.pdf/119

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

118

என் பார்வையில் கலைஞர்



மதில் கட்டினார்கள். ஐம்பது அறுபது ரவுடிகள் இரவில் குடிபோதையில் கத்திய கத்தல் இன்னும் என் காதுகளை அடைத்துக் கொண்டிருக்கிறது. தெருவாசிகள் அனைவரும் வீட்டுக்குள் முடங்கிப் போனார்கள். வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போல, சரஸ்வதி வித்யாலயா என்ற பள்ளியின் தாளாளரிடம், ஆளுங் கட்சியைச் சேர்ந்த ஒரு குண்டர் தம்மை மயிலாப்பூர் கட்சிப் பிரமுகராக அறிவிக்கும் விசிடிங் கார்டை அவரிடம் கொடுத்து விட்டு, நிலத்தைப் பிடித்த ரவுடிகளுக்கு தவிக்கும் போது தண்ணீர் கொடுக்க வேண்டும் என்று மிரட்டாத குறையாகச் சொல்லிவிட்டுப் போய்விட்டார். இவர் ஒரு பிராமணர். பொதுவாக பிராமணர்கள், சாதுக்களாகத்தான் இருப்பார்கள். வெளிப்படையாக அடாவடியில் இறங்க மாட்டார்கள். ஆனால், இப்படிப்பட்ட பிராமணர்களையே ரவுடிகளாக்கியப் பெருமை, அப்போதைய ஆளுங்கட்சிக்கே சேரும்.

இந்த நிலத்தை வளைப்பதில் வெற்றி பெற்றவர்கள், தெருவின் மறுபக்கம் உள்ள நாலு கிரவுண்ட் இடத்தைச் சுற்றி வளைக்கப் போன போது, இரண்டு கோஷ்டிகளுக்கு இடையே பயங்கரமான மோதல். நான்கைந்து கொலைகள் விழலாம் என்பது போன்ற நிலைமை. உடனே, நான் காவல் துறைத் தலைவரான தேவாரம் அவர்களுக்கு டெலிபோன் செய்து, இந்த விவரத்தைப் புகாரிட்டு, காவல் படையைக் கணிசமாக அனுப்பும்படி வேண்டுகோள் விடுத்தேன். தன்னந்தனியாக மோதல் நடந்த இடத்திற்குப் போனேன். என் மனைவி 'போகாதே போகாதே என் கணவா' என்று ஒப்பாரி போடாத குறைதான்.

அந்தச் சமயத்தில், இந்தக் கலவரத்தை அடக்க திருவான்மியூர் காவல் நிலையத்தில் இருந்து ஒரு ஜீப்பில் மூன்றே மூன்று போலீசார் வந்தனர். இந்தக் கோஷ்டிகளில் வலுவான ஒன்றிற்கு அவர்களது ஆதரவு இருப்பது தெரிந்து விட்டது. நானும் அந்த இடத்தை அப்போதைக்கு சீல் வைக்கவில்லை என்றால், அங்கேயே சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்தேன். எப்படியோ போலீஸ்காரர்கள், தாங்கள் ஆதரித்த கோஷ்டியின் காலில் விழாத குறையாக, அவர்களிடம் கெஞ்சிக் கூத்தாடி அப்புறப் படுத்தி வெளியேற்றினார்கள்.

இப்படிப்பட்ட சமூக அநீதியை, இலக்கியவாதி என்ற முறையிலும் சாடினேன். ஜெயலலிதாவிடம் சேர்ந்து கொண்ட துதிபாடிகள் எப்படிப் பட்டவர்கள் என்பதை விளக்கும் காலில்