பக்கம்:என் பார்வையில் கலைஞர்.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம்

125



கலைஞரை நான் சந்தித்த ஓரிரு நாட்கள் கழித்து எனது உறவினர் தோழரும், திமுக பிரமுகருமான ஆலடி அருணா அவர்கள் தொலைபேசியில் என்னோடு தொடர்பு கொண்டு ‘யோவ்... கலைஞர் கிட்ட யானைப்பூச்சியோ, பூனைப் பூச்சியோன்னு ஒரு கதையை கொடுத்தீராமே அது நல்லாயிருக்குன்னு கலைஞர் உங்ககிட்ட சொல்லச் சொன்னாருய்யா... அப்புறம், கலைஞர் கிட்ட சில யோசனைகள் சொன்னீராமே... அதையும் கணக்கில் எடுத்து இருக்கிறதாக உம்மக்கிட்ட சொல்லச் சொன்னாருய்யா என்று தென்பாண்டி தமிழில் தெரிவித்தார்.

ஆலடி அருணாவும், அந்த யோசனைகளைப் பற்றி தகவல் கேட்கவில்லை. நானும் தெரியப்படுத்த வில்லை. ஒரு மாபெரும் தலைவருக்கும் அவரோடு தோழமை கொண்ட ஒரு எழுத்தாளருக்கும் இடையே நடந்த உரையாடல் ரகசியத்தை மதித்தமைக்காக அவரை இப்போதும் நன்றியோடு நினைத்துக் கொள்கிறேன். ஆலடி அருணா அவர்கள் நெல்லையில் கல்லூரியில் படிக்கும்போது, நான் கடையத்தில் உயர்நிலைப் பள்ளியில் படித்தவன். அப்போதே நாங்கள் நண்பர்கள். சந்திக்கும் போதெல்லாம் கடுமையாக வாதாடிக் கொள்ளுவோம். இப்போது கூட அப்படித்தான். ஆனாலும், மனிதர் வரலாற்றுச் சான்றுகளையும், புள்ளி விவரங்களையும் அள்ளித் தந்து என்னையும் ஒரு தற்காலிக திமுகவாக மாற்றிவிடுவார்.

நான் கலைஞரை சந்தித்த சில நாட்களில் திருவான்மியூருக்கு அருகே, திமுகவின் அப்போதைய பகைக்கட்சி அலுவலகத்தில் எதற்கோ குறிவைக்கப்பட்ட வெடிகுண்டு ஒன்று தவறுதலாக வெடித்ததாகவும், இது எல்டிடி குண்டு என்றும் கலைஞருக்கு குறி வைக்கப்பட்டது என்றும் பத்திரிகைகள் பரப்பரப்பான செய்திகளை வெளியிட்டன. இந்தச் சந்தர்ப்பத்தில் மத்திய அரசும் விடுதலைப்புலி களின் கொலைப் பட்டியலில் கலைஞரும் இருப்பதாக மாநில அரசையும், அவரையும் உஷார்ப் படுத்தியதாகக் கேள்வி.

இந்தப் பின்னணியில், கலைஞரும் முரசொலியில் அந்தக் குண்டு வெடிப்பை தன்னைக் கொல்வதற்கு குறிவைத்ததாக கருதலாம் என்ற பொருளில் எழுதியிருந்தார். விடுதலைப் புலிகள் குறித்து நான் சுட்டி காட்டிய அணுகுமுறையையும் அவர் வெளிப்படையாக சொல்லியிருக்கலாம். அதற்குள் இலங்கை