பக்கம்:என் பார்வையில் கலைஞர்.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு.சமுத்திரம்

139


கண்களைக் கலக்கிய
ஒரு
கையறு சொல்


1997ஆம் ஆண்டு நவம்பர் மாத இறுதியில் கலைஞரை மீண்டும் சந்தித்தேன்

மேட்டுக் குடியினரால் புறக்கணிக்கப்பட்ட திராவிட இலக்கியத்தை மறு ஆய்வு செய்யும் போக்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்களிடம் கடந்து ஐந்தாண்டு காலமாக தீவிரமாக ஏற்பட்டுள்ளது. இதில் என் பங்கும் உண்டு. எழுத்தாளர் வெ. புகழேந்தி எழுதிய அண்ணா வழி சிறுகதைகளை நான் படித்தேன். இந்தத் தொகுப்பில் அண்ணா, கலைஞர், தென்னரசு, ராதா மணாளன், இரா செழியன், சேகரன், முரசொலி மாறன், டிகேசீனிவாசன் போன்றவர்களின் அற்புதமான சிறுகதைகள் இடம் பெற்றிருந்தன. ஒரு குப்பைத் தொட்டி தனது அனுபவத்தைச் சொல்வது போன்ற கலைஞரின் ‘குப்பைத் தொட்டி’ என்ற சிறுகதை இப்போது கூறப்படுகிறதே மேஜிக்கல் ரியலிசம் - அதாவது மாந்திரீக யதார்த்தம் அதற்கு முன்னோடியாக இருந்த கதையாகும். இந்தக் கதை இலக்கிய இதழான செம்மலரில் சிகரங்களைத் தொட்ட சிறுகதை வரிசையில் பிரசுரிக்கப்பட்டது.

தாகம், சங்கம், சர்க்கரை, பவளாயி போன்ற அற்புதமான மண்வாசனை படைப்புகளை உருவாக்கியவரும், பல மொழிகளில் கொண்டெடுத்து செல்லப்பட்டவருமான என் இனிய தோழர் சின்னப்ப பாரதி அவர்கள் திராவிட மற்றும் முற்போக்கு படைப்பாளிகளின் படைப்புகள் மேட்டுக்குடியினரால் இருட்டடிப்பு செய்வதை உணர்ந்து, இவற்றை பிற மொழிகளுக்கு எடுத்துச் செல்வதற்காக ஒரு ஆங்கில காலாண்டு இதழை துவக்கினார். இந்தியன் லிட்ரேச்சர் அண்டு அஸ்தட்டிக்ஸ் (ILA-Indian Literature and Aesthetics) என்ற இந்த காலாண்டு