பக்கம்:என் பார்வையில் கலைஞர்.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம்

143


மஞ்சள் துண்டு
ஒரு
மஞ்சள் விமர்சனம்


1998 ஆம் ஆண்டு ஜனவரி மாதவாக்கில் கலைஞரை மீண்டும் சந்தித்தேன்.

வள்ளலாருக்கு அமிர்தசரஸ் பொற்கோவில் போல் ஒன்றை உருவாக்க வேண்டும் என்று முன்பு கொடுத்த குறிப்பை கலைஞரிடம் நினைவுப்படுத்தினேன். பிறகு நகைச்சுவையாக ‘நீங்கள் போட்டிருக்கும் மஞ்சள் துண்டை விட, வள்ளலார் உங்களுக்கு அதிகமாக வலிமை கொடுப்பார்’ என்று சொல்லி விட்டு நாக்கைக் கடித்தேன். என்னிடம் அவர் காட்டிய தோழமையில் அவர் மகத்தான் தலைவர் என்பதையும், தமிழகத்தின் முதல்வர் என்பதையும் மறந்து போய் சிறிது அதிகமாகவே பேசிவிட்டேன்.

கலைஞர், தோளில் மஞ்சள் துண்டு அணிவதை, பகுத்தறிவு வாதிகள் என்று கூறிக் கொள்கிறவர்கள், மேடைகளில் கிண்டல் அடித்தும், பத்திரிகைகளில் எழுதியும் வந்த வேளை. உடை என்பது உடம்பு முழுவதையும் நாகரீகமாக மறைக்கும் வரை, அது ஒருவரின் சொந்த விவகாரம் என்பதை, வேண்டும் என்றே மறந்து போய், கலைஞரை இந்தப் பேர்வழிகள் வம்புக்கு இழுத்துக் கொண்டிருந்தார்கள். இதன் தாக்கத்தாலோ என்னமோ நானும் மஞ்சள் துண்டை குறிப்பிட வேண்டியது ஆயிற்று. ஆனாலும், கலைஞர் அசரவில்லை. மஞ்சள் துண்டை போட்டிருப்பதை விஞ்ஞானப் பூர்வமாக விளக்கப் போனார். நான் அவர் பேச்சை இடைமறித்து இப்படிக் கூறினேன்.

‘சார், நீங்க மஞ்ச துண்ட போடுறத கிண்டல் செய்றவங்க பகுத்தறிவுக்காக அப்படி வாதாடல. எப்படியாவது உங்கள் இந்த மஞ்சள் துண்ட எடுக்க வைச்சிட்டு, அப்படியாவது நீங்க