பக்கம்:என் பார்வையில் கலைஞர்.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

146


சாண் ஏறி
முழம் சறுக்கிய
தேர்தல்கள்...


நான், கலைஞரை மீண்டும் 1998ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் கலைஞரை மீண்டும் கோபாலபுரத்தில் சந்தித்தேன்.

இதே ஆண்டு பிப்ரவரியில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல்களில் ஜெயலலிதா அணி 30இடங்களையும், கலைஞர் அணி 10இடங்களையும் பெற்று மத்திய அரசியலில் ஒரு திருப்புமுனை ஏற்பட்ட காலக்கட்டம். ஜெயலலிதா கலைஞர் அரசை, பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று மத்திய அரசை மிரட்டிக் கொண்டிருந்த வேளை.

இந்த தேர்தல்களுக்கு முன்பு, மார்க்சீய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களில் ஒருவரான டி.கே. ரங்கராஜன் அவர்களின் அங்கீகாரத்தில் கோவை, மதுரைத் தொகுதிகளை அந்தக் கட்சிக்கு விட்டுக் கொடுக்கும்படி மூப்பனாரிடம் மேற்கொண்ட முயற்சிகளையும், கலைஞரோடு தொடர்பு கொள்ள முடியாமல் போன முயற்சிகளையும் எடுத்துரைத்தேன். ஒருவேளை மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி, திமுக கூட்டணியில் சேர்க்கப்பட்டு இருந்தால், மிகச்சிறிய அளவிலான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அதிமுக - பாஜக கூட்டணியை தோல்வியுறச் செய்திருக்கலாம். இதனால் இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது என்று வெளிப்படையாகவே தெரிவித்தேன்.

கலைஞர், முகத்தில் எந்த உணர்வும் இல்லாமல், நான் குறிப்பிடுவதை உள்வாங்கிக் கொண்டார். ஓரளவு உற்சாகம் குறைந்துதான் காணப்பட்டார். அவரது அரசியலே சாண் ஏறி முழம் சறுக்குகிற கதை. பழையகதை திரும்பி விடக் கூடாதே என்று அவர் சிந்தித்திருந்தால் அது தவறில்லை. அவரை