பக்கம்:என் பார்வையில் கலைஞர்.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

154

என் பார்வையில் கலைஞர்



போடப்பட்டிருந்தன. இதய நோயால் பீடிக்கப்பட்ட இவர் இதனால் பல்வேறு நீதிமன்றங்களுக்கு அலைகழிக்கப்பட்டார். கலைஞர் ஆட்சிக்கு வந்த விட்டதால், இது குறித்து நான் ஏதாவது செய்ய வேண்டும் என்றும் தொலைபேசியில் அப்போது கேட்டுக் கொண்டார். நானும் சட்டத்துறை அமைச்சர் ஆலடி அருணா அவர்களை அணுகி சாலய்யாரைப் பற்றி எடுத்துரைத்தேன். அமைச்சர் அவர்கள் எந்த முயற்சியும் எடுக்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. கலைஞர், சாலையார் மீது போடப்பட்டிருந்த அரசு வழக்குகளையும் திரும்பப் பெற்றுக் கொண்டார் என்ற தகவலை, அரசு அறிவிக்கும் முன்பே சாலய்யாருக்கு நான்தான் தொேைபசியில் தெரிவித்தேன். மகிழ்ந்து போனார்.

சாலய்யாரின் மரணம் கேட்டு நானும் அவரது வீட்டிற்கு சென்றேன். சமூகச் சிந்தனையாளர்களான, திருவாளர்கள் ஆனைமுத்து, பழ.நெடுமாறன், இன்குலாப், தோழர் சசெந்தில்நாதன், அருகோபாலன், தமிழ்ச் சங்க சுந்தரராஜன், முகம் மாமணி போன்றவர்கள் வந்திருந்தார்கள்.

என்றாலும், அண்டை வீட்டுக்காரரான கலைஞர் சாலய்யாருக்கு இறுதி மரியாதை செலுத்த வரவில்லை. ஒரு அனுதாப தந்தி மட்டுமே அடித்திருந்தார். இதை அங்குள்ள தமிழறிஞர்கள் அனைவருமே சுட்டிக் காட்டினார்கள். அதே தெருவில் அப்போதே நடைபெற்ற அனுதாப கூட்டத்தில் நான் கலைஞர் வராததை கண்டித்துப் பேசினேன். ஒரு வெள்ளைக்கார அரசில், தவத்திரு குன்றக்குடி அடிகள் காலமான போது முதல்வர் ஜெயலலிதா அனுதாப அறிக்கை வெளியிடாததையும், தவத்திரு. கிருபானந்த வாரியார் மரணமான போது சட்டப் பேரவையில் அனுதாப தீர்மானத்தை நாவலர் கொண்டு வந்த போது இந்த அம்மையார் அலட்சியமாக பேரவையை விட்டு வெளியேறியதையும் சுட்டிக் காட்டினேன்.

இதே மாதிரி கருப்பு அரசாங்கத்தின் தலைவரான கலைஞரும், அதே மாதிரி நடந்துக் கொண்டது தவறானது என்று கண்டித்தேன். அதே சமயம், கலைஞர் சாலய்யார் மீது போடப்பட்ட அரசு வழக்குகளை திரும்ப பெற்றுக் கொண்டதையும் சுட்டிக் காட்டினேன். கலைஞர் வராததற்காக, அவரை தனிப்பட்ட முறையில் என்னிடம் நோகடித்து பேசிய அத்தனை பேரும் அனுதாபக் கூட்டத்தில் அவரைப் பற்றி