பக்கம்:என் பார்வையில் கலைஞர்.pdf/174

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம்

173



இந்தச் சந்திப்பின்போது, கலைஞருடன் பெரும்பாலும் அரசியல் நிகழ்வுகளையே பேசினேன். மேயர் ஸ்டாலினுக்கு மக்களிடையே பலத்த ஆதரவு இருப்பதையும், அவர் அல்லும் பகலும் குறிப்பாக தீவிபத்துக்ளின் போதும், தீராத மழையின் போதும் ஓடோடி உழைப்பதை மக்கள் உன்னிப்பாக கவனிக்கிறார்கள். இப்போது போலவே அவர் எப்போதும் அடக்கி வாசிக்க வேண்டும் என்று கலைஞர் கேளாமலே ஒரு அறிவுரையை உதிர்த்தேன்.

ஒரு குறிப்பிட்ட சாதி, அவருக்கு வாக்களிக்காது என்கிற யதார்த்தத்தைச் மீண்டும் சுட்டிக்காட்டி, அந்த சாதியினைரை ஆற்றுப்படுத்தவும், அதற்கு எதிராக உள்ள சாதியை மென்மைப் படுத்தவும், கலைஞர் ஆவன செய்ய வேண்டும் என்றேன். சென்ற தடவை, நான் குறிப்பிட்ட அந்த சாதியினர், தன் பக்கம் நிற்பதாக குறிப்பிட்ட கலைஞர், இப்போது அவர்களது ஒட்டுமொத்தமான ஆதரவில், பத்து சதவீதம் குறைந்து இருப்பதாக குறிப்பிட்டார். இதுவும், அவர், அந்த சாதியினர் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை காட்டுகிறதே தவிர, யதார்த்ததை அல்ல என்பது எனக்குப் புரிந்தது. ஆனாலும், அவர் கருத்துக்கு எதிராக நான் பலமாக வாதாடவில்லை. அடுத்து வரவிருக்கும் தேர்தலுக்கு முன்பு, இந்த யதார்த்தத்தை அவர் புரிந்து கொள்வதும், அதற்கு ஏற்ப வியூகம் வகுப்பதும் தமிழகத்தின் ஒட்டுமொத்தமான நலனுக்கு உகந்தது.

எனக்கு சாதியில் நம்பிக்கை இல்லைதான். கலைஞரும் அப்படியே. அதேசமயம் தமிழகத்தில் தொற்று நோயாய் பரவிவரும் சாதிய அரசியலையும் புறக்கணிக்க முடியாது என்பதே என் கருத்து. சாதி வழியாக, சாதியத்தை கலைஞரால் கட்டுக்குள் கொண்டுவர முடியும் என்று நினைக்கிறேன்.

திருமண வரவேற்பு நாளில், கலைஞர் இரவு எட்டு மணி அளவில், ராஜேஸ்வரி கல்யாண மண்டபத்துக்கு வந்தார். ஏழு அமைச்சர்களை தன்னோடு கூட்டி வந்தார். இவர்களில் பலருக்கு, நான் அழைப்பிதழ் கொடுக்கவில்லை. எனக்கு அவர்களை ஏறிட்டுப் பார்க்கவே கூச்சமாக இருந்தது. குறிப்பாக மூத்த அமைச்சர்களான வீரபாண்டி ஆறுமுகம், கோ.சி.மணி அவர்கள் மேடைக்கு கலைஞரோடு வந்து இருந்தார்கள். கலைஞருக்கு வேண்டிய ஒருவர், தங்களுக்கும் வேண்டியவர் என்ற முறையில்தான் வந்திருப்பார்கள். அமைச்சர்கள் ஆர்க்காடு வீராசாமி, துரைமுருகன், பொன்முடி,