பக்கம்:என் பார்வையில் கலைஞர்.pdf/177

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

176

என் பார்வையில் கலைஞர்



அக்காதெமி சார்பில் அதன் செயலாளர் கவிஞர் சச்சினாந்தமும், சென்னை கிளையின் அப்போதையை தனி அதிகாரி கிருஷ்ண மூர்த்தியும் கலந்து கொண்டார்கள். நானும் பொதுக்குழு உறுப்பினராய் கலந்து கொண்டேனா கலக்கினேனா என்பதை வாசகர்கள் தான் தீர்மானிக்க வேண்டும்.

இந்தக்குழுக் கூட்டத்தில் அறிமுக உரையாற்றிய துணைத் தலைவரும், காட்சிக்கு எளியவரும், கடுஞ்சொல் அற்றவருமான முனைவர். தமிழண்ணல் அவர்கள், சங்கப்பலகை எல்லோருக்கும் பொதுப்படையானது என்று குறிப்பிட்டார். ஆகையால், இதனை தவறாக நினைக்க வேண்டாம் என்றும் ஒருசில மேட்டுக்குடி இலக்கியவாதிகளை மனதில் வைத்துக் கொண்டு பேசினார்.

இந்தச் சங்கப்பலகை எதற்காக அமைக்கப்பட்டது என்பதை, அவரை விட நான் அதிகமாகவே அறிவேன் என்பதால் என்னால் குறிக்கீடாமல் இருக்க முடியவில்லை. முனைவரின் பேச்சில் குறுக்கிட்டு இந்த அமைப்பு, ஒரு இடஒதுக்கீட்டு பலகைதான் என்று வாதிட்டேன். திராவிட, முற்போக்கு இயக்க படைப்பாளிகளை, சாகித்திய அக்காதெமியின் துணையோடு இங்குள்ள மேட்டுக்குடி இலக்கியவாதிகள் இருட்டடிப்பு செய்வதால்தான், இந்த அமைப்பு உருவாக்கப் பட்டு இருக்கிறது என்றேன். ஆகையால், தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட, அதே சமயம், தகுதி வாய்ந்த படைப்பாளிகளை அடையாளப் படுத்துவதே இந்த சங்கப்பலகையின் முதல் நோக்கம் என்றும் வாதிட்டேன். சிறிது உணர்ச்சி வசப்பட்டு, கடுமையாகதான் பேசினேன்.

எதற்காக இந்த சங்கப்பலகை துவக்கப்பட்டதோ, அதன் நோக்கம் புரியாமல், சுந்தரம் ராமசாமிக்கும், ஜெயகாந்தனுக்கும் சங்கப்பலகை, குறும் படங்களை எடுக்க வேண்டும் என்று ஒருவர் தினமணியில் எழுதியிருந்தார். இன்னொருவர் அசோகமித்திரன், இந்திரா பார்த்தசாரதி போன்ற இலக்கிய மேதைகளை முன்னிலைப் படுத்துவதற்காக இந்த அமைப்பு உருவாக்கப் பட்டு இருப்பதாக ஒரு பத்திரிகைக்கு பேட்டி அளித்திருந்தார். இது சங்கப் பலகையின் சங்கிலிகளை அறுத்து விடுகிற சாமாச்சரமாக எனக்குத் தோன்றியது. இதனால், இந்த அமைப்பும் இன்னொரு சாகித்திய அக்காதெமியாக ஆகிவிடுமோ என்று என்னுள் அச்சம் ஏற்பட்டது. ஆகையால் எடுத்த எடுப்பிலேயே இதன் நோக்கத்தை உள்ளது உள்ளபடியே சொல்லிவிட வேண்டும் என்ற எண்ணத்தில், நான் பெரிதும் மதிக்கும் முனைவர்