பக்கம்:என் பார்வையில் கலைஞர்.pdf/178

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம்

177



தமிழண்ணல் பேச்சில் குறுக்கிட வேண்டியதாயிற்று. அவர் பேசி முடிப்பது வரைக்கும் காத்திருக்க எனக்கு பொறுமையில்லை.

பொதுக் குழு உறுப்பினர்களிடையே பெரிதும் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் எவரும் இடைமறித்து பேசிய என்னை இடைமறிக்கவில்லை. கலைஞரின் தலைமை அவர்களது வாய்களை கட்டிப் போட்டிருக்கலாம். அல்லது கலைஞர் பார்த்துக் கொள்ளுவார் என்று சும்மா இருந்து இருக்கலாம். ஒருவேளை, நான் பேசியது முரட்டுத்தனமாக இருந்தாலும் அதில் உண்மை பொதிந்திருப்பதை உணர்ந்தும் பேசாது இருந்து இருக்கலாம். இந்த மூன்று காரணங்களாலோ, அல்லது மூன்றில் ஒன்றாலோ தமிழகமெங்கும் இருந்து வந்த சிந்தனையாளர்கள், எந்த வித எதிர்வினையும் ஏற்படுத்தவில்லை. இந்தப் போக்கை என் கருத்துக்கான மௌன சாட்சியமாக நினைத்துக் கொண்டு நான் மேற்கொண்டும் பேசப்போனேன்.

அப்போது கலைஞர் இடைமறித்தார் இட ஒதுக்கீடாக இருக்க வேண்டும் என்று சொன்ன என்னைப் பார்த்து ‘சமுத்திரம் எல்லோருக்கும் பொதுவானது’ என்று சிலேடை நயத்தோடு குறிப்பிட்டார். நானும் சிறிது நேரத்திற்குப் பிறகு ‘சமுத்திரம் சில சமயம் கரையேற வேண்டியது இருக்கிறது’ என்றேன். கலைஞர் என்னையே உற்று நோக்கினார். அந்த பார்வையின் பொருளை புரிந்து கொண்டு, நான் மேற்கொண்டு பேசவில்லை. இதை ஆனந்த விகடனில் எழுத்தாளர் சுஜாதா அவர்கள் மென்மையாக குறிப்பிட்டிருந்தார். ஆனால் கணையாழிப் பத்திரிகையோ, தனக்கே இயல்பான மேட்டுக்குடித் தனத்தில், கலைஞர் என்னை தலையில் தட்டி உட்கார வைத்து விட்டதாக குறிப்பிட்டு என்னை கோமாளியாக்குவதாக நினைத்து, கோமாளித்தனம் செய்தது.

சங்கப் பலகையின் பொதுக்குழு கூட்டத்தில் பல்வேறு இலக்கிய சமாச்சாரங்களை உறுப்பினர்கள் கோடி காட்டிக் கொண்டிருந்தார்கள். எனக்கு உள்ளூர வருத்தம். ஒரு மூத்த தமிழறிஞரை அதுவும் என் மீது அன்புக் காட்டும் பெரியவரின் பேச்சை அப்படி இடைமறித்து இருக்கக் கூடாது என்ற குற்ற உணர்வு ஏற்பட்டது.

கலைஞரின் கணிப்பில் இருந்து நான் வீழ்ந்திருப்பேனோ என்ற சந்தேகம். சமுத்திரம் எங்கே போனாலும் கலாட்டா செய்வார் என்று சங்கப் பலகை எதிரிகள் நான் சொல்ல வந்தததை