பக்கம்:என் பார்வையில் கலைஞர்.pdf/183

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

182

என் பார்வையில் கலைஞர்



முரசொலி மாறன் உடல்நலக் குறைவின் போது, தொலைக்காட்சியில் கலைஞர் துடித்த துடிப்பைக் கண்டு நான் கண்கலங்கி விட்டதாக குறிப்பிட்டேன். உடனே அவர் அப்பல்லோ மருத்துமனையில் குறிப்பேட்டில் நான் எழுதியதை படித்ததாக தெரிவித்தார். இதில் மாறனின் வாழ்வும், கலைஞரின் வாழ்தலும் தமிழக நலன்களோடு பின்னிப்பிணைந்து உள்ளன என்று எழுதியிருந்தேன்.

எனக்கும், மாறன் அவர்களுக்கு வந்தது போன்ற இதய நோய் சிறிய அளவில் வந்திருப்பதை கலைஞரிடம் குறிப்பேட்டேன். உடனே அவர் துடித்துப் போனார். அதுபற்றி அவர் விசாரிக்கப் போனபோது, நான் எச்சரிக்கையானேன். அமைச்சர் ஆலடி அருணா அவர்களுக்கு இருதயத்தில் இரண்டு அடைப்புகள் இருப்பதாகவும், ஆனாலும் ஐந்தாறு மாதங்களுக்குப் பிறகு அறுவைச் சிகிச்சை செய்து கொள்ளலாம் என்றும் மருத்துவர்கள் தெரிவித்திருந்தார்கள். இதைக் கேள்விப்பட்ட கலைஞர் அருணாவை, உடனடியாக மருத்துவமனையில் சேரும்படி செய்து விட்டாராம். இதை மனதில் வைத்து எனக்கும் அப்படி ஒரு மருத்துவமனை வாசம் உடனடியாக ஏற்படக் கூடாது என்பதற்காக இலேசுதாங்க அய்யா’ என்று சொல்லிவிட்டு பேச்சை மாற்றினேன். இந்த ‘அய்யா எனது சார் என்கிற வார்த்தையை எப்படியோ மாற்றிவிட்டது. எல்லாம் என் இனிய நண்பர், எந்த மனத்தாங்கலையும் மனதில் வைத்துக் கொள்ளாத அற்புதப் பேச்சாளர். தமிழ்க் குடிமகனின் வாசனைதான்.

முரசொலி மாறனை பற்றிய பேச்சையடுத்து, இன்றைய அரசியல் நிலவரம் பற்றி பேச்சு வந்தது. வரப்போகிற தேர்தல்கள் குறித்து கலைஞரிடம் சில சந்தேகங்கள் கேட்டேன். திமுக பிரச்சாரம் ஆக்கிரமிப்பாக இல்லை. தற்காப்பாக இருக்கிறது என்றேன். கலைஞர் ‘அப்படியில்லை பலர் திறமையாக பேசுகிறார்கள்’ என்றார்.

அரசியல் கட்சிகளின் அணிவகுப்பில், கலைஞர் இந்த அளவிற்கு மௌனம் சாதிக்கக் கூடாது என்றும், ஒருசில நிகழ்வுகளை சுட்டிக் காட்டினேன். கலைஞர் தனது மவுனத்திற்கான காரணங்களை என்னிடம் தெரிவித்தார். அந்தக் காரணங்களை கண்டு நான் அதிர்ந்து போனேன். அவரது