பக்கம்:என் பார்வையில் கலைஞர்.pdf/22

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
நம்ம சமுத்திரத்துக்கு
ஒரு
நல்ல மாலையாக...

1996 ஆம் ஆண்டு... ஜூலை மாதம் முதல் வாரத்தில் ஒருநாள்...

எனது வாகனத்தில் இரண்டு சக்கர கால்களும், எனது கைகளும் ஒன்றாக இணைய, நான்கு கால் பாய்ச்சலில் கோபாலபுரத்தில் நான்காவது குறுக்குத் தெருவுக்குள் நுழைந்தேன். வாகனத்தை ஒரு ஓரமாக நிறுத்தி விட்டு, நடந்தேன். அங்குள்ள காவல்துறை அதிகாரிகள் என்னை ஓரங்கட்டி பார்த்தார்களே தவிர, குறுக்கு விசாரணை எதுவும் செய்யவில்லை. என்னை என் பாட்டுக்கு நடக்க விட்டார்கள். எனக்கு ஆனந்த அதிர்ச்சி. கடந்த ஐந்து ஆண்டு காலத்தில் முதல்வரின் வீட்டுக்குள் இப்படி சுயேட்சையாக நடமாட முடியாது. இது எனக்கு ஒரு புதுமையாகவும், சாராசரி மனிதனுக்கு கிடைத்திருக்கின்ற தேர்தல் புரட்சி பலனாகவும் தோன்றியது.

கலைஞரின் வீட்டிற்கு பலதடவை சென்றிருப்பதால் அதை அடையாளம் கண்டுபிடிப்பதில் சிரமம் இல்லை. பிரதான சாலையில் இந்த குறுக்குத் தெருக்களை கண்டுபிடிப்பதற்கே ஒரு ஆய்வுப் பட்டம் கொடுக்கலாம். ஆனால், தெருவின் மறுமுனையில் இருந்த கலைஞரின் வீட்டு முன்னால் ஒருசில சுழல் விளக்கு கார்களும், கூட்டமும் இருப்பதை வைத்துத்தான், அதை கலைஞரின் வீடு என்று புதிதாக வருபவர் அனுமானிக்க முடியும். அந்த தெரு முழுக்க மாடமாளிகை கூட கோபுரங்கள் போன்ற கட்டிடங்கள். கலைஞரின் வீடு இவற்றோடு ஒப்பிடும் போது மிகச் சாதாரணமானது. ஒருவர் அமைச்சராகப்