பக்கம்:என் பார்வையில் கலைஞர்.pdf/28

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சு. சமுத்திரம்

27



மணியோடு பேசியது எனக்கு சிறிது தெம்பளித்தது. இந்தச் சமயத்தில் மாடிப்படிகளில் இருந்து கீழே இறங்கிய தோழர் சண்முகநாதன், நான் கலைஞரை பார்க்க மாடிக்குச் செல்லலாம் என்று சமிக்ஞை செய்தார்.

மாடிப்படிகளை ஓடாக்குறையாகத் தாவி, கலைஞர் உள்ள அறைக்குள் நுழைகிறேன். வாசற்பக்கம் முகம் போட்டுத்தான் கலைஞர் உட்கார்ந்திருக்கிறார். ஒற்றைச்சோபா இருக்கையில் இருந்து என்னைப் பார்த்ததும் ‘வாங்க சமுத்திரம்! என்று எழுகிறார். நான் பதைத்துப் போய்விடுகிறேன். ஒரு மகத்தான் மனிதர் எனக்காக எழுந்திருக்க கூடாது. அப்படியே எழுந்த அவரை அதிக நேரம் நிற்க வைக்கக் கூடாது என்று ஓடோடிப் போகிறேன்.

கலைஞர் உட்கார்ந்ததும், நானும் உட்காருகிறேன். கலைஞரை எழுத்தாளத்தனமாக பார்க்கிறேன். பல்வேறு சந்திப்புகளில் இப்படி கலைஞரை மட்டுமே பார்த்ததால் அந்த அறைக்குள் கலைஞர் மட்டுமே இன்னும் எனக்கு காட்சித் தருகிறார். புகைப்படங்கள் உண்டா... திரைச்சீலைகள் உள்ளனவா என்பது இன்றளவும் தெரியாது. கலைஞரின் பார்வையில் பழைய விரக்திக்குப் பதிலாக ஒரு பிரகாசம் தெரிகிறது. ஆனால் அந்த பிரகாசம் தன்னை பிரகாசப்படுத்தாமல், இந்த சமூகத்தைப் பிரகாசப்படுத்த முனைவது போல் என்னுள் ஒரு மதிப்பீடு எழுகிறது. மக்கள் கொடுத்த பொறுப்பை அவர்கள் எதிர்பார்ப்பிற்கு ஏற்ப நினைவேற்ற வேண்டுமே என்ற சுமையை தலைதாங்கி, முகத்திலும் அதன் தடயங்கள் ஏற்பட்டுள்ளதுபோல் தோன்றியது. ஆளவந்த பெருமை இல்லாமல் அதை நிறைவேற்றும் வியூகத்தை எப்படி உருவாக்குவது என்ற சிந்தனையே, அவர் முகத்தில் மண்டிக் கிடந்ததாக எனக்குப் பட்டது.

கலைஞரிடம் அவரது வெற்றி வாகைக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டேன். பல்வேறு விவகாரங்களைப் பேசினோம். இவற்றுள் பல அந்தரங்கமானவை. கலைஞர் என்மீது நம்பிக்கை வைத்து தெரிவிக்கும் தகவல்களை மனதில் வைத்து வாயால் பூட்டி வைக்க வேண்டுமே என்ற அச்சமும் கூடவே ஏற்படுகிறது.

இன்னொன்றும் தட்டுப்படுகிறது. ஒரு குட்டி அதிகாரியைப் பார்க்கப் போனால் கூட, அவர், கோப்பைப் பார்த்துக் கொண்டே பேசுவார். அவர் பேசி முடிப்பது வரைக்கும் நாம் மெளனமாக இருந்தால் ‘நீங்க பாட்டுக்கு பேசுங்க’ என்பார். சிலர்