பக்கம்:என் பார்வையில் கலைஞர்.pdf/38

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சு. சமுத்திரம்

37



கலைஞர் வந்ததும் மேடையில் இருந்து கூட்டத்தைப் பார்த்தால் அந்த மண்டபம் நிரம்பி வழிந்து, வெளியேயும் வியாபித்திருந்தது. இந்தக் கூட்டத்தில் கட்சித் தொண்டர்களை விட இலக்கியத் தொண்டர்களே அதிகம். கலைஞர் குறுநகை தவழ வந்தார். நானும் எனது குடும்பத்தினரும் அவரை எதிர் கொண்டு வரவேற்றோம்.


கலைஞர், எனது மூன்று நூல்களையும் பலத்த கை தட்டலுக்கிடையே வெளியிட்டார். இவற்றை ராஜேஸ்வரி அம்மையார் வாங்கிக் கொண்டார்.

தமிழ்ப் பண்பாட்டுத் துறை அமைச்சர் முனைவர். தமிழ்க் குடிமகன் தலைமை வகிக்க, எனது இனிய தோழர் கவிஞர் இளவேனில் வரவேற்புரை ஆற்றினார். அமைச்சர் ஆலடி அருணா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஆர்.என். நல்லகண்ணு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தலைவர் ச. செந்தில்நாதன். தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற செயலரும் முற்போக்கு எழுத்தாளருமான பொன்னீலன், கிறிஸ்துவ இலக்கிய சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர். தயானந்தன் பிரான்சிஸ், மணிவாசகர் பதிப்பகத்தின் உரிமையாளர் பேராசிரியர் ச.மெய்யப்பன், சென்னைத் தொலைக்காட்சி நிலையத்தின் அப்போதைய இயக்குநர் ஏ.நடராசன் ஆகியோர் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தார்கள். அப்போது மத்திய அமைச்சராக இருந்த என் இனிய தோழரும் மனதில் பட்டதை வெட்டு ஒன்று துண்டு இரண்டாய் எடுத்துரைப்பவருமான எஸ்.ஆர். பாலசுப்ரமணியம் அவர்கள் இந்த விழாவில் கலந்து கொள்வதற்கு என்றே புதுடில்லியில் இருந்து புறப்பட்டு விட்டதாகச் செய்தி வந்தது.

இந்த விழாவிற்கு தலைமை வகித்து பேசிய முனைவர் தமிழ்க் குடிமகன் எனது ஒருசில கதைகளில் கட்டுரைத்தனம் வந்துவிடுகிறது என்றார். அவர் பேசி முடித்ததும் நான் விவரம் கேட்டபோது உங்கள் கதைகளில் ‘செய்திகளின் வீச்சு இலக்கிய வீச்சை அமுக்கிவிடுகிறது’ என்றார். நான் அசந்து விட்டேன். இது அற்புதமான திறனாய்வு. விமர்சகரை படைப்பாளி மதிக்கும் திறனாய்வு. கலைஞர் தக்கவரைத் தான் தமிழ் பண்பாட்டுத் துறை அமைச்சராக ஆக்கியிருக்கிறார் என்பதில் மகிழ்ச்சி. இந்த விழாவில் பேசிய செந்தில்நாதன் மத்திய சாகித்திய அக்காதெமி போல் மாநில அளவில் ஒரு அக்காதெமியை அமைக்க வேண்டும்