பக்கம்:என் பார்வையில் கலைஞர்.pdf/39

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

38

என் பார்வையில் கலைஞர்


என்று இன்றைய குறள்பீடத்திற்கு வித்திட்டார் என்று சொல்லலாம்.

ஆலடி அருணாவுக்கு என்னைப் பற்றி நீண்டகாலமாகத் தெரியும் என்பதால் விலாவாரியாகப் பேசினார். எழுத்தாளத் தோழர் பொன்னீலன், 1972ஆம் ஆண்டிலேயே, அரசு ஊழியர்கள் படைப்பு இலக்கியத்திற்குள் செல்லலாம் என்று கலைஞர் ஆணையிட்டதை புளங்காகிதமாகச் சொன்னார்.

கலைஞர் ஏழரை மணி அளவில் நூல்களை வெளியிட்டு உரையாற்றினார். மூன்று படைப்புகளில் இரண்டில் பல்வேறு பக்கங்களுக்கிடையே அம்பு காகிதங்கள் குத்தப்பட்டு அந்தப் பக்கங்களின் ஓரங்களில் கலைஞர் கையால் குறிப்பெழுதப் பட்டிருந்தது. அவரது கையில் இருந்த அந்தப் புத்தகங்களை பார்க்கும்போது அவற்றிற்கு நீண்ட வெள்ளிச் சங்கிலிகள் அணிவிக்கப் பட்டது போல் தோன்றியது.

சிறுகதை தொகுப்பில் ஆங்காங்கே சில பகுதிகளையும் எனது கதைகளின் கதைகளில் சில பகுதிகளையும், தனது விமர்சனத்துடன் அவர் வாசித்துக் காட்டியபோது விழா மண்டபம் அதிர்ந்தது. அதிகாரிகளின் ஆணவப் போக்கை சித்தரிக்கும் ஒரு கதைச் சுருக்கத்தைச் சொல்லி விட்டு ‘இது நடந்த கதை... இனிமேல் நடக்காத கதை’ என்றார். எனது கதைகளின் கதைகளில் ஒரு இளம் பெண்ணைப் பற்றி குறிப்பிடும்போது ‘அழகாக இருக்க மாட்டாள். ஆனால் கவர்ச்சியாக இருப்பாள்’ என்று ஒரு வரி வரும். உடனே, அழகைப் பற்றி சமுத்திரம் சொல்கிறார் என்று எள்ளல் சுவையோடு பேசியபோது கூட்டம் கைகளைத் தூக்கித் தூக்கித் தட்டியது. (அந்த அளவிற்கு அடியேன் அழகனாக்கும்) அந்தப் பெண்ணும் நானும் தொட்டதில்லை கெட்டது இல்லை என்ற வரியை படித்துவிட்டு நம்புவோமாக என்றார். கலைஞரின் உரை இந்த நூலுக்கு முன்னுரையாக கொடுக்கப்பட்டிருப்பதால் மேற்கொண்டு இங்கே விளக்கவில்லை. ஆனாலும், எழுத்தாளனை அவனது அந்தஸ்தை வைத்து மதிப்பிடலாகாது என்று இப்போது இருக்கும் இலக்கியப் போக்கை விமர்சித்தார். எழுத்தாளன் சொன்னால் அது பலிக்கும் என்று தனது அனுபவத்தையே முன் வைத்தார். சமுத்திரம் எழுத்து ஆய்த எழுத்து என்றார். சமுத்திரத்திற்கு கலைஞர் மீது தாக்கமும் உண்டு கலைஞரை தாக்கியதும் உண்டு என்றார். உப்பு கரிக்கும் சமுத்திரம்,