பக்கம்:என் பார்வையில் கலைஞர்.pdf/56

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சு. சமுத்திரம்

55



என்றாலும், தமிழகத்தைப் பொறுத்தளவில் மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி, திராவிட முன்னேற்ற கழகம் ஆகியவற்றை தவிர பெரும்பாலான கட்சிகள் நெருக்கடியை வரவேற்றன. வீர தீர பிரதாபங்களை வெளியிடும் பல்வேறு சங்கங்களும், ஊழியர் அமைப்புகளும் இந்த பிரகடனத்தை வரவேற்பதாக அறிக்கைகள் விட்டனர். எங்கள் நிலையத்திற்கு முன்னால் எனது கண் முன்னாலேயே அரசை விமர்சித்ததற்காக ஒருவரை வடநாட்டு போலீசார் கைது செய்து கொண்டு போனார்கள். இம் என்றால் சிறைவாசம், ஏனென்றால் வனவாசம் என்ற கதைதான்.

நெருக்கடி நிலை பிரகடனப் படுத்தப்பட்ட போது முதல்வராக இருந்த கலைஞர் மறைமுகமாகப் போர்க்கொடி தூக்கியது அவர் மீது எனக்கு முதல் தடவையாக ஒரு ஈர்ப்பை ஏற்படுத்தியது. இந்திராகாந்தியை எதிர்த்த ஜார்ஜ் பெர்னான்டஸ் உள்ளிட்ட பல்வேறு தேசிய தலைவர்களுக்கு அவர் புகலிடம் வழங்கினார். பெருந்தலைவர் காமராசரை கைது செய்ய வேண்டும் என்று வந்த ஆணையையும் கிடப்பில் போட்டு விட்டார். நெருக்கடி நிலையினால் நாடு என்ன ஆகுமோ என்று பதறிப் போன பெருந்தலைவரும், கலைஞரும் ஒருவருக்கு ஒருவர் முட்டுக் கொடுத்துக் கொண்டார்கள். ஆனால், பெருந்தலைவர் 1975ஆம் ஆண்டு அக்டோபர் இரண்டாம் தேதி அண்ணல் காந்தி பிறந்தநாளில் காலமானார். கலைஞர் அரசு 1976ஆம் ஆண்டு ஜனவரி மாத இறுதியில் பதவி நீக்கம் செய்யப்பட்டது. குடியரசு தலைவரின் ஆட்சி அமுலுக்கு வந்தது. இ ஆய அதிகாரிகளான ஆர்.வி. சுப்பிரமணியமும், தாவேயும் தமிழக அரசின் ஆலோசகர்களாக வந்தார்கள். ஆர்.வி.எஸ் பதவியேற்ற உடனேயே தவத்திரு குன்றக்குடி அடிகளாரை கைது செய்ய ஆணையிட்டதாக அறிகிறேன். காஞ்சி சங்கராச்சாரியார் அவர்களின் தலையீட்டால் அடிகளார் கைது செய்யப்பட வில்லை.

என்றாலும் தேசியவாதி என்ற முறையில் கலைஞர் ஆட்சி பதவி நீக்கம் செய்யப்பட்டதில் மகிழ்ச்சிதான். இந்திரா அரசு கலைஞரின் மகன் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அவருக்கு வேண்டிய முக்கியமானவர்களை சிறையில் தள்ளியது.

ஒருநாள், எனது அறையில் நானும் வானொலியின் மூத்த செய்தியாளரும் இப்போது பத்திரிகை தகவல் அமைப்பின் இயக்குநராகவும் உள்ள டி.ஜி. நல்லமுத்து என்னோடு பேசிக் கொண்டிருந்தார். முன்பெல்லாம், கலைஞரை விமர்சிப்பதுதான் எங்களது பொழுது போக்காக இருந்தது. இப்படி, நாங்கள்