பக்கம்:என் பார்வையில் கலைஞர்.pdf/57

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

56

என் பார்வையில் கலைஞர்


கலைஞரை கடுமையாக விமர்சிக்கும் சமயங்களில் கலைஞரின் அருமை பெருமைகளை எடுத்துரைக்கும் எங்க அலுவலகத் தோழர் ஒருவர், ஆட்சி மாறிய பிறகும், எனது அறைக்கு வந்தார். ஒரு தகவலை சிரித்தபடியே சுவையாக எங்களை மகிழ்விக்கும் நோக்கத்தோடோ என்னவோ குறிப்பிட்டார்.

முகஸ்டாலின், கோபாலபுரத்தில் உள்ள முதல்வர் வீட்டில் கைது செய்யப்பட்டு போலீஸ் வேனில் ஏற்றப்பட்டாராம். கலைஞர் வேனில் இருந்த தனது மகனின் கையைப் பிடித்துக் கொண்டு விடை கொடுக்கப் போனாராம். அப்போது, ஒரு வடநாட்டு காவலர், லத்திக் கம்பால் வேனை அடித்து, கலைஞரை மிரட்டும் தொனியில் பார்த்துவிட்டு ‘சலோ சலோ’ என்று சொல்லி விட்டு ஸ்டாலினோடு வேனில் ஏறி பறந்து விட்டாராம்.

இந்தத் தகவலை கேட்ட நான், மகிழ்ச்சி பொங்க தோன்றிய அவரிடம் ‘கொஞ்ச வேல இருக்கு... தயவு செய்து அப்புறம் வாருங்கள்’ என்று சொல்லிவிட்டு அப்படியே அசையாது இருந்தேன். உடனே, நல்லமுத்து ‘எதற்குப்பா அவர விரட்டுற’ என்றார். நான் விளக்கினேன். விளக்கினேன் என்பதை விட நெகிழ்ந்து போன குரலில் உடைந்து போய்ச் சொன்னேன் என்று குறிப்பிடலாம். ‘ஆயிரந்தான் இருந்தாலும் கருணாநிதி (கலைஞரல்ல) நம்மவர்’ மூன்று நாட்களுக்கு முன்புவரை, அரசனாக வாழ்ந்தவர். அவரை கேவலப்படுத்துவது போல் ஒரு காவலர் நடந்து கொண்டது தமிழனின் கண்டனத்துக்கு உரியது. இதைவிடக் கேவலமானது கலைஞரின் ஆதரவாளராக கூறிக்கொண்ட இந்த நண்பர் நாம் மகிழ்ச்சி அடைவோம் என்று நினைத்து, இந்த தகவலை சிரிப்பும் கும்மாளமுமாய்ச் சொன்னது! என்று பதிலளித்தேன்.

இந்தச் சூழலை எழுதும் இப்போது கூட, கலைஞர் வேனை தொட்டுக்கொண்டு இருப்பது போலவும் ஸ்டாலின் வேனுக்குள் இருப்பது போலவும் காவலன் அப்படி நடந்து கொண்டது போலவும் காட்சி வருகிறது. இதற்கு பெயர்தான், தான் ஆடாவிட்டாலும் சதையாடும் என்பதோ? உண்மையிலோ அந்த தகவலை கேட்ட நான் ஆடிப் போய்விட்டேன்.

சென்னை வானொலி நிலையத்தில் இருந்து சென்னையிலே உள்ள களவிளம்பரத்துறைக்கு என்னை மாற்றினார்கள். கலைஞர் அரசு செய்ததாக கூறப்படும் ஊழல் பட்டியலை கையில்