பக்கம்:என் பார்வையில் கலைஞர்.pdf/69

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

68

என் பார்வையில் கலைஞர்


கலைஞரையும் ஒருமித்து பார்க்கும் போது எனக்கு பாட்டாளித் தோழர்களின் முதுகெலும்பை நிமிர்த்திய மார்க்சுக்கும், ஏஞ்சலுக்கும் இருந்த நட்பும், அனுசரனையும் நினைவுக்கு வந்ததது.

1969 ஆம் ஆண்டிடு கலைஞர் முதல் தடவையாக முதல்வரானபோது, நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த பேராசிரியர், இருவரும் கலந்துக் கொண்ட கூட்டத்தில் ‘கலைஞரை தலைவராக ஏற்றுக் கொள்ளவில்லை... தளபதியாக ஏற்றுக் கொள்கிறன்’ என்று வெளிப்படையாகச் சொன்னவர். உடனே கலைஞரும் ‘தளபதியாகவே இருக்கிறேன். தளர் பதியாக ஆக்காதீர்கள்’ என்று தனக்கே உரிய பாணியில் பதிலளித்தார். நாவலர் போன்றவர்கள் மறுபக்கம் போன போதும், பேராசிரியர் தனது கட்சியின் பக்கமே நின்றார். இருவரும் ஒருவரோடு ஒருவர் ஆலோசிக்கும் தோரணை அதில் கட்டுண்டுள்ள சமூகநல அக்கறை, ஒரு எழுத்தாளனுக்கு நல்லதொரு காட்சியாகும்.

நான், அவர்கள் மூவருக்கும் பொதுப்படையாக கும்பிடு போட்டு விட்டு, கலைஞரிடம் என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன். அவரும் தெரியும் என்பது போலவே காட்டிக் கொண்டார். எதற்காக வந்தீர்கள் என்பது போல் இயல்பாக என்னைப் பார்த்தார். எங்களின் அரைநிமிட உரையாடல் இந்த பாணியில்தான் நடந்தது.

‘உங்களிடம் நான் தனியாகப் பேச வேண்டும்.“’

‘இங்கேயே பேசலாமே’

‘இல்ல தனியாத்தான் பேசணும்’

‘இப்போது முடியாதே’

‘அப்ப நான் வாரேன்’

‘சரி’

நான் ஏறிய வேகத்திலேயே இறங்கினேன். என்னைப் பார்த்ததும் சாகணேசன், அவர்கள் பதறியடித்து எழுந்தார். ‘என்னங்க என்ன நடந்தது’ என்றார். கலைஞர், நான் இறங்குவதற்குள் அவரைத் தாளித்து இருப்பார் என்பது புரிந்து விட்டது. நானும் நடந்ததை சொல்லி விட்டு மடமடவென்று வெளியேறினேன்.