பக்கம்:என் பார்வையில் கலைஞர்.pdf/7

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

V



சமுத்திரத்தைச் சோதிக்க ஆசை...

இங்கே சமுத்திரம் சொன்னார். “கலைஞர் முதல்வராக பொறுப்பேற்காமல் இருந்திருந்தாலும், அவரைத்தான் அழைத்து இந்த நிகழ்ச்சியிலே இந்த நூல்களை வெளியிடச் செய்திருப்பேன்” என்று அவர் சொன்னாரே அதைத்தான் விரும்புகின்றேன். (பலத்த கைதட்டல்) அதை சோதித்துப் பார்க்க எனக்குக் கூட ஒரு ஆசை (பலத்த சிரிப்பு) சில ஆண்டுகளுக்குப் பிறகு முதலமைச்சராக இல்லாமல் இருந்து, அவரும் இதுபோன்று நூலை எழுதி அப்பொழுது அழைக்கிறாரா இல்லையா என்று பார்க்கவேண்டும் என்று எனக்கு ஒரு ஆசை. இந்த ஆசை சில பேருக்கு ஆறுதலைக் கூட தரும். அப்பாடா என்று பெருமூச்சுக் கூட எழும். (பலத்த சிரிப்பு)

நான் அதற்காக இருப்பவன் அல்ல என்பதை அருமை நண்பர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் நல்லகண்ணுபோன்ற என்னை உணர்ந்தவர்கள் மிகமிக நன்றாக அறிவார்கள். கொள்கைக்காகவே இளம்பிராயம் முதல் வாழ்பவன் நான். அதனால்தான் ஒரே இடத்தில் நிலைத்து நிற்கிறேன். அதுவும் உங்களுக்குத்தெரியும். (பலத்த கைதட்டல்) அப்படி வாழதவர்கள் என்ன ஆனார்கள் என்பதைத்தான் சமுத்திரம் “ஒரு மாமரமும் மரங்கொத்திப் பறவைகளும்” என்ற அரிய நூலில் படம் பிடித்துக் காட்டியிருக்கிறார்.

கனமான கணங்கள்...

ஆனால், இப்போது எவ்வளவு கனமான பணிகள்! கணம் என்றால் மாண்புமிகு என்ற பொருளில் சொல்லவில்லை. எவ்வளவு அதிகமான பணிகள் என்னை அழுத்திக் கொண்டு இருக்கின்றன என்பது உங்களுக்குத் தெரியும். சமுத்திரம் நூல் வெளியிட இந்த நாளை குறித்துக் கேட்டபோது நான் சொன்னேன். “அநேகமாக 25ம் தேதி நிதிநிலை அறிக்கையின் மீதான் பதில் உரை முடிந்துவிடும். மறுநாள் நிகழ்ச்சியை வைத்துக் கொள்ளலாம்” என்று சொன்னது உண்மைதான். ஆனால் அந்த அறிக்கையைத் தயாரிக்க நான் எடுத்துக் கொண்ட நாட்கள், அதற்காக நான் விழித்த இரவுகள், அது தயாரித்து வெளிவந்த பிறகு அதைப்பற்றி வந்த விமர்சனங்கள், அதற்கு ஏற்ப, அந்த அறிக்கையில் காணவேண்டிய திருத்தங்கள், நேற்றைய தினம் நான் ஆற்றவேண்டிய பதிலுரை, இதற்காக நான் செலவழித்த நேரம், இன்று காலையிலே, நம்முடைய இழந்த கவுன்சில்-சட்டமன்ற மேலவை மீண்டும் வரவேண்டும் என்பதற்கான தீர்மானத்தின் மீது நான் ஆற்றிய உரை, அதற்குப் பிறகு உலக வங்கியினுடைய இயக்குநரைக் கண்டு சென்னைக்கும், தமிழகத்திற்கும்