பக்கம்:என் பார்வையில் கலைஞர்.pdf/71

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

70

என் பார்வையில் கலைஞர்


என்பது இதுவரைக்கும் எனக்குப் புரியவில்லை. ஒரு வேளை எழுத்தாளனின் கிறுக்குத் தனங்களில் இதுவும் ஒன்று என்று நினைத்துக் கொண்டாரோ அல்லது ஒரு கணத்தில் பெருந்தலைவர் காமராசரை போல், ஆட்களை எடை போடுவதில் வல்லவரான கலைஞர் நான் வெள்ளந்தி என்று நினைத்தாரோ என்னமோ.

நான் என்னமோ உலகத் தமிழினத் தலைவர் போலவும், அவர் என்னவோ தொண்டர் போலவும் நான் அப்போது நடந்து கொண்ட விதம் இப்போது கூட என்னையே நான் ஒரு இங்கிதமற்ற பேர்வழியாக நினைக்கத் தோன்றுகிறது.