பக்கம்:என் பார்வையில் கலைஞர்.pdf/75

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

74

என் பார்வையில் கலைஞர்



காகங்களா? கழுகுகளா?
ஒரு
கவித்துவமான பதில்


1989 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 27 ஆம் தேதி கலைஞர் இரண்டாவது தடவையாக முதல்வராகப் பதவியேற்றார்.

ஜானகி ஆட்சி கலைக்கப்பட்டு குடியரசுத் தலைவர் ஆட்சியில் நடந்த சட்டப் பேரவை தேர்தலில் கலைஞர் பெரும்பான்மையான இடங்களைப் பெற்றதும், அதிமுக ஜெயலலிதா அணி எதிர்க்கட்சி ஆனதும் காங்கிரஸ் அடுத்து வந்ததும் பழைய செய்திகள்.

வெற்றிவாகைச் சூடிய கலைஞர், தான் உருவாக்கி, அதுவரை தனக்கே இடமில்லாமல் போன வள்ளுவர் கோட்டத்தில் பதவியேற்றார். அதற்கு முன்னதாக செய்தியாளர்களோடு நானும் கோபாலபுரத்திற்குப் போனேன். கலைஞர் காரில் ஏறவதற்கு முன்பாக, அருகே உள்ள வீட்டிற்குச் சென்று, இரண்டு மூதாட்டிகள் காலில் முழங்காலிட்டு விழுந்தார். அவர் கன்னங்களில் அலை அலையாக நீர் கொட்டியது. அந்தக் காட்சியைப் பார்த்ததும் எனக்கு அழுகை வந்து விட்டது. இரண்டு தமக்கையரும், அப்படியே, அவரது முதுகை தட்டித் தலையை கோதிவிட்டு, கலைஞரின் கண்ணீருக்கு, கண்ணீரையே பதிலாக்கினார்கள். பாசமலர் தோற்றுவிடும்.

கலைஞர் பதவியேற்ற மறுநாளே, சென்னைக் கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்தார். நான் ஒரு கும்பிடு போட்டதும் என்னைத் தெரியும் என்பது போல் தலையாட்டினார். பல்வேறு கேள்விகளை, செய்தியாளர்கள் கேட்டார்கள். சில சமயங்களில் வித்தியாசமான கேள்விகளை நான் கேட்பேன். இதை எல்லோரும் ரசிப்பார்கள் கலைஞரிடம் இப்படிக் கேட்டேன்