பக்கம்:என் பார்வையில் கலைஞர்.pdf/79

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

78

என் பார்வையில் கலைஞர்


கலைஞரின் விளக்கத்தை செய்தியாளர்கள் எழுதிக் கொண்டிருந்தபோது, நான் பேசாமல் முதல்வர் பேசுவதையே கேட்டுக் கொண்டிருந்தேன். உடனே அவருக்கு கோபம் வந்து விட்டது. நான் சொல்வதை குறிப்பெடுக்காமல் இருக்கீங்க. பிறகு எதற்கு வந்தீங்க என்று கோபமாகக் கேட்டார். ஒருவேளை, நான் ஜெயலலிதாவின் ஆளாகிவிட்டேன் என்று அவர் அனுமானித்து இருக்கலாம். உடனே நான் ஒலிபரப்புச் செய்தி சுருக்கமானது என்றும், அவர் சொன்னதை மனதில் குறித்துக் கொண்டேன் என்றும் தெரிவித்தேன். பிறகு ஒப்புக்கு குறித்துக் கொள்வது போல், பக்கத்தில் உள்ளவரிடம் ஒரு பேப்பரை கடன் வாங்கி, மை இல்லாத பேனாவால் எழுதுவது போல் பாவனை செய்தேன். உடனே ‘இது கலைஞரின் ஓரக் கண்ணுக்குத் தெரிந்து எங்கே எழுதியதைக் காட்டுங்கள் என்று கேட்டுவிடுவாரோ என்ற பயம். என்றாலும் திருச்சியில் பகல் இரண்டு பத்து செய்தியில் கலைஞர் குறிப்பிட்ட அத்தனையும் முதல் செய்தியாக ஒலிப்பரப்பானது.

இந்த அரசியல் பரபரப்பை அடுத்து, இதைவிட பயங்கரமான ஒரு பரபரப்பு ஏற்பட்டது. சட்டப் பேரவைக் கூட்டம் கூடியிருக்கிறது. முதல்வர் கலைஞர், நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ய எழுந்து நிற்கிறார். அதுவரை சட்டப் பேரவைக்கே வராத எதிர்க்கட்சித் தலைவரான ஜெயலலிதா அன்று வந்திருக்கிறார். முதல்வர் நிதிநிலை அறிக்கையை படிக்கப் போகும் போது அவர் படிக்கக் கூடாது என்று வாதாடுகிறார். இந்தச் சமயத்தில் ஜானகி அணியின் ஒற்றை உறுப்பினரான பி.எச். பாண்டியன், ஜெயலலிதாவுக்கு எதிராக ‘இது கோர்ட் அல்ல சட்டப்பேரவை’ என்று அந்த அவையே அதிரும்படி கத்துகிறார். இதுவே பேரவையின் கலிங்கத்துப் பரணிக்கு பிள்ளையார் சுழியாகிறது.

ஜெயலலிதா, கலைஞரை கிரிமினல் என்கிறார். உடனே கலைஞர் ஏதோ பதிலுக்குச் சொல்கிறார். பேரவையிலிருந்து மூன்றடித் தூக்கலில் உள்ள செய்தியாளர் மாடத்தில் இருந்த நாங்கள் உஷாராகிறோம். உன்னிப்பாக கவனிக்கிறோம். கலைஞரின் மூக்குக் கண்ணாடி, ஜெயலலிதா, அவரது பைலை தட்டிவிட்டதால் கீழே விழுகிறது. உடனே திமுக உறுப்பினர்கள் ஜெயலலிதாவை நோக்கி முன்னேறுகிறார்கள். ஆனால், அவரோ சோபா செட்டுக்குள் போய் பதுங்கிக் கொள்ளுகிறார்.

இப்படி நுழையும் போது அவரது மேல் சேலை கலைகிறது. இதை என் கண் முன்னாலேயே பார்த்தேன். திமுக உறுப்பினர்கள்