பக்கம்:என் பார்வையில் கலைஞர்.pdf/81

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

80

என் பார்வையில் கலைஞர்


செய்திகளாக்க வேண்டிய கட்டாயமும் எனக்கு ஏற்பட்டது. இது ஒரு விசித்திரம். கண்முன் நடந்தது ஒன்றாக இருக்க அதை, கண் கொண்டு பார்க்காதவர்கள் வேறு விதமாகச் சொன்னாலும் எனக்கு அந்த அறிக்கைகளை இருட்டடிப்பு செய்ய உரிமை இல்லை .

இத்தகைய எனது நடுநிலைமை செயல்பாடுகள், கலைஞருக்கு பிடித்துப் போயிருக்க வேண்டும். சென்னை தொலைக்காட்சியில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர் மாற்றப் பெற்றதும் கலைஞரே அப்போதைய தகவல் ஒலிபரப்பு அமைச்சரான உபேந்திராவிடம் தொலைபேசியிலும் நேரிலும் பேசி, என்னை தொலைக்காட்சி செய்தி ஆசிரியராக பொறுப்பேற்கச் செய்தார்.

எனக்கும் கலைஞர் எனது நடுநிலைமை மீது வைத்திருக்கும் நம்பிக்கையில் அபரீதமான மகிழ்ச்சி ஏற்பட்டது. ஒரு தமிழனின் ஆட்சியை தாக்குப் பிடிக்கச் செய்வதற்கு அணில் முயற்சியாக தொலைக்காட்சியில் பணியாற்ற வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டேன். கலைஞரின் பதவிக் காலத்திலேயே இலவசமாக அல்லது சலுகை விலையில் அரசு நிலத்தை வாங்கி, வானொலி - தொலைக்காட்சி நகர் ஒன்றை உருவாக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.

ஆனால் - நினைத்தது ஒன்று. நடந்தது வேறு.