பக்கம்:என் பார்வையில் கலைஞர்.pdf/82

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சு. சமுத்திரம்

81


பையிலிருந்து வெளிப்பட்ட
ஒரு
பூனை


1990 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், சென்னை தொலைக்காட்சி நிலையத்தில் செய்தி ஆசிரியராக பொறுப்பேற்றேன்

மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம், கலைஞர் பரிந்துரைத்த என்னை, மூன்று மாத காலம் உள்ளே நுழைய விடாமல் இழுத்தடித்தது. மீண்டும் கலைஞர், அமைச்சர் உபேந்திராவுக்கு நேரில் பேசி என்னை அங்கே அனுப்பினார். ஆனாலும், அந்த நிலையத்தின் இயக்குநரும், அவரது துதிபாடிகளும் என்னை பகைப்பார்வையாகவே பார்த்தார்கள். வானொலித் துறையில் அதன் இயக்குநருக்கு இணையான செய்தியாசிரியர் முற்றிலும் சுயேச்சையானவர். இங்கேயும் அப்படித்தான் இருக்கவேண்டும். ஆனால், நிலைய இயக்குநரோ நான் அவருக்கு கீழே வேலை செய்வது போல பாவித்துக் கொண்டார்.

செய்தி ஆசிரியரின் தலைமையில் இயங்க வேண்டிய செய்தியாளர்கள் நிலைய இயக்குநரின் தலைமையில் இயங்கினார்கள். போதாக்குறைக்கு லவ்வு வேறு. ஒரு பெண் செய்தியாளர், எனது அறைக்கு வந்து எனது மேசையில் உள்ள டெலிபோனை எடுத்து ‘ஹலோ! தாமு’ என்று கொஞ்சு மொழியில் பேசுவார். அவர் அப்படிப் பேசுவது என்னை மிரட்டுவது போலவும் இருந்தது.

நான் ஒரு நாள் பொறுத்தேன். கூடவே அலுவலக தொலைபேசி, முக்கியமான செய்திகளுக்காகவே தவிர, மூடத்தனமான காதலுக்கல்ல. மறுநாள் இந்த பாரும்மா, இந்த காதல் பேச்செல்லாம் இங்கே பேசாதே. வேறு எங்கேயாவது போய்ப் பேசு.

எ - 6