பக்கம்:என் பார்வையில் கலைஞர்.pdf/84

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சு. சமுத்திரம்

83


இந்தத் தொல்லைகள் போதாது என்பது போல், காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு தலைமையில் எனக்கு எதிராக நிலையத்திற்கு முன்பு ஒரு ஆர்பாட்டமே நடந்தது. காங்கிரஸ் செய்தியை நான் சரியாகப் போடவில்லையாம். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவராக இருந்த எனது நண்பர் வாழப்பாடி ராமமூர்த்தியிடம் முறையிட்டால் ‘கலைஞரையும், மூப்பனாரையும் ஏன் அப்படி குளோசப்ல காட்டுறே’ என்ற பதிலளித்தார்.

‘இது அரசியலுக்கானது... எனக்கு எதிரானது அல்ல’ என்றும் ஆற்றுப்படுத்தினார். ஆனால், இப்போது குளோசப் லாங்சாட்டாகவும், லாங்சாட் குளோசப்பாகவும் மாறியிருப்பது அரசியல் விந்தை. ஆனாலும், கலைஞர் மையப் புள்ளியில்தான் இருக்கிறார். வட்டக்கோடு தான் மாறியிருக்கிறது. போகட்டும்.

எனது செய்திப் பிரிவு, திரெளபதி போல் துகிலுரியப் பட்டது. கெளரவர்களால் அல்ல. கணவர்கள் என்று சொல்லிக் கொண்டவர்களால் அதிமுக கட்சிப் பத்திரிகையான நமது எம்.ஜி ஆர், என்னை தினமும் தாக்கிக் கொண்டிருந்தது. அரசியல் சில்லரைகள் எனக்கு எதிராக கையெழுத்திட்டும், மொட்டையாகவும் மனுக்களைப் போட்டுக் கொண்டுயிருந்தார்கள்

இத்தனை நெருக்கடிகளிலும் நான் கருமமே கண்ணாக இருந்தேன். எனக்கு முன்பு பொறுப்பாசிரியராக இருந்தவர் அங்கேயே காலூன்ற வேண்டும் என்று நினைத்தோ என்னவோ தொலைக்காட்சியின் இரண்டு செய்தி அறிக்கையிலும், வாரத்திற்கு ஏழு நாட்களும் கலைஞரின் வாய்ஸ் காஸ்டை - அதாவது அவரது பேச்சை ஒலிப்பரப்பினார். இது கலைஞரையே நாளடைவில் மாசுபடுத்தும் என்பதோடு செய்தி நெறிகளுக்கே முரணானது.

எனவே, நான் கலைஞர் குரலை, செய்தியில் சேர்ப்பததை வாரத்திற்கு மூன்றாக்கி பிறகு, அதையும் இல்லாமல் செய்து விட்டேன். முக்கியமான நிகழ்ச்சிகளின் போது மட்டுமே, கலைஞரின் பேச்சை ஒளிபரப்பினேன். தமிழகம் முழுவதும் எனக்கு தெரிந்தவர்கள், தொடர்ந்து கலைஞரின் பேச்சை நாள்தோறும் ஒளிபரப்பினால் செய்தியின் இலக்கணமும், நம்பகத்தன்மையும் போய்விடும் என்றார்கள். கலைஞருக்கும் கெட்ட பெயர் என்றனர். கலைஞரும் இதை சரியாகவே எடுத்துக் கொண்டார். பொது நிகழ்ச்சிகளில் என்னைப் பார்க்கும் போதெல்லாம், ஒரு பார்வையாலோ அல்லது ஒரு சொல்லாலோ