பக்கம்:என் பார்வையில் கலைஞர்.pdf/89

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

88

என் பார்வையில் கலைஞர்



வந்த ராஜிவ் காந்தியின் நாடாளுமன்றப் பேச்சு செய்தியாகி எட்டரை மணியளவில், டெலிபிரிண்டரில் வந்திருக்கக் கூடிய பிரதமர் வி.பி.சிங்கின் பதில், டெலிபிரிண்டருக்குள்ளேயே முடங்கிப் போயிருக்கும். நான் எத்தனை பேருக்குத்தான் சிலுவை சுமப்பது!

எனக்குக் கிடைத்த தொலைக்காட்சி ஜீப்பில், உபேந்திராவின் விருந்தினர் மாளிகையில் இருந்து நேராகக் கலைஞரின் கோபாலபுர வீட்டிற்குச் சென்றேன். இரவு நேரம். கலைஞர், கோவைக்குச் சுற்றுப்பயணமாக செல்வதற்கு வீட்டில் இருந்து படியிறங்கி விட்டார். அவரைச் சுற்றி ஏகப்பட்ட தலைவர்கள், உயர் அதிகாரிகள்... காரில் ஏறப்போன அவர் என்னைப் பார்த்து நின்றார். முகத்தைக் கோபமாக்கிக் கொண்டார். எங்களுக்கிடையே நடந்த உரையாடலின் விவரம் இதுதான்.

‘உபேந்திரா கிட்ட தி.மு.க. அன்பாப்புலர்ன்னு சொல்லி இருக்கீங்க’

‘ஆமாம்... அவர் என் அமைச்சர். அவரிடம் அரசியல் சூழலைச் சொல்ல வேண்டியது, என்னோட கடமை. இதனால் உங்களுக்கு நான் செய்தி போடுவது, எந்த விதத்திலும் குறையவில்லையே?’

‘ஓகோ... நீங்க நாங்கன்னு பிரித்துப் பேசுறீங்களா? பூனை பையில் இருந்து வெளிப்பட்டு விட்டது. உங்கள் உண்மையான சுயரூபம் இப்போதுதான் தெரிகிறது.’

‘சார். உங்களுக்கே தெரியும். நான் காமராசர் தொண்டன். கட்சியை மீறி உங்களை இரண்டாவது காமராசாகப் பார்க்கிறேன். நீங்கள் முழுமையான தமிழன் என்கிற ஒரே காரணத்தால்தான், இப்பவும் டிவியில் பல்லைக் கடிச்சிட்டு இருக்கிறேன். நீங்களும் இப்படிப் பேசினா என்ன சார் அர்த்தம்?

‘சரி. பார்க்கலாம்.’

‘வாரேன் சார்’

‘நன்றி’

கலைஞர், காரில் ஏறினார். அவர் போவது வரைக்கும்