பக்கம்:என் பார்வையில் கலைஞர்.pdf/9

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

VII


வெட்கமாக இருந்தது. அந்தப் பின்னணியில் அந்த அசுத்தக் காற்றிலும் தென்றல் வாடை கிடைத்தது.”

“என் வீட்டுக்கு பக்கத்து வீடு ஒரு பூக்கார குடும்பம் வாழ்ந்த வீடு. அங்கே வயதுக்கு வந்த ஒரு பூக்காரப் பெண், அம்மாவும் அண்ணனும் உதிரியாக வாங்கி வந்த பூக்களை மாலையாக தொடுப்பது அவளது பணி. அவள் பார்ப்பதற்கு கவர்ச்சியாக இல்லை இவர் சொல்கிறார். (பலத்த சிரிப்பு) என்றாலும் அழகாக இருப்பாள். கலகலவென்று சிரிப்பாள். எதற்கெடுத்தாலும் ‘நல்லா கேட்ட, ஒரு கேள்வி’ என்பாள். அவளுக்கு என் மீது ஏதோ ஒரு அனுதாபம். நான் குழாயடியில் படும் பாட்டையும் கல்லூரித் தோழர்கள் என் வீட்டுக்கு வந்தால் அவர்களை உட்கார வைக்க இடம் கிடைக்காமல் நான் திண்டாடுவதையும் கண்ட அவள் ஒரு நாள் குழாயடிக்குப் போன என்னை அவள் கையாட்டித் தடுத்தாள்.

முகத்தை வெட்கமாக்கிக் கொண்டு - இதை எல்லோரும் என்ன எழுதுவார்கள் என்றால் நாணிக் கோணி முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டு என்று இவ்வளவு வார்த்தைகளுக்குப் பதிலாக ஓரே வரியில் ரத்தினச் சுருக்கமாக எழுதுகிறார். முகத்தை வெட்கமாக்கிக் கொண்டு, என் தவலையை வாங்கி தண்ணீர் பிடித்துக் கொடுத்தாள். எவரும் கண்ணில் தென்படாதபோது, நான் குளிக்கப் போவதும், அவள் தண்ணீர் பிடித்துக் கொடுப்பதும் வழக்கமாகிவிட்டது. (பலத்த சிரிப்பு) நான் கல்லூரிக்குச் செல்லும்போது, அவள் வாசலில் நின்று என்னை வழியனுப்பி வைப்பாள். கல்லூரியில் நடைபெறும் பேச்சுப் போட்டிகளில், நான் வாங்கும் பரிசுக் கோப்பைகளை இரவு நேரத்தில் ஜன்னல் வழியாக அவளிடம் கொடுப்பேன். அவள் அதனை வாங்கி கண்ணில் ஒற்றிக் கொண்டுவிட்டு பின்னர் என்னிடம் திருப்பிக் கொடுப்பாள். இவ்வளவுக்கும் அவளை தொட்டதில்லை: கெட்டதில்லை. நம்புவோமாக (பலத்த சிரிப்பு)

பிறகு ஒரு கல்லூரி மாணவரை வீட்டிற்கு அழைத்து வர, அவன் அந்தப் பெண்ணைப் பார்த்து ஏதோ ஏகடியம் பேச , அதன் காரணமாக, இவர் மீதே அவள் கோபம் கொண்டு, வேறொருவரைத் திருமணம் செய்து கொண்டு ஊரை விட்டே போய் விட்டாள்.

பல ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு பேருந்து நிலையத்திலே அந்தப் பெண் வயதான நிலையில், தேய்ந்த நிலையில் இருப்பதைப் பார்த்து