பக்கம்:எப்படி வளரும் தமிழ்.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

83


மகிழ்பவர்; கற்றத்தார்க்கும் உதவுபவர்; ஓம்பாது உண்டு மகிழ்பவர்; மனங் கூம்பாது வழங்குபவர்; இத்தகையோரது பரிசில் வாழ்க்கை, நும்மோரன்ன செம்மலும் உடைத்து நண்ணார் நாண அண்ணாந்தேகி இனிது ஒழுகினல்லது பிறர்க்குத் தீங்கு செய்யாதது” என்று கூறுகிறார்.

“வள்ளியோர்ப் படர்ந்து” (புறம். 47) என்று தொடங்கும் கோவூர் கிழார் பாடலால் பண்டைப் புலவர்தம் உள்ளம், பெற்றது கொண்டு மகிழ்வது, பிறர்க்கு உதவுவது, செம்மல் உடையது, அண்ணாந்து ஏகுவது, இனிது ஒழுகுவது, பிறிர்க்குத் தீங்கு செய்யாதது என்னும் உண்மைகளை உணர்ந்து கொள்ளலாம். இத்தகுதி வாய்ந்த புலவர் வணக்கத்துக்குரியரே அன்றி, இகழ்வுக்குரியரல்லர் என்பதையும் தெரிந்துகொள்ளலாம். தம்மை நினைந்து தமிழை மறந்தவர்தாம் இகழ்வுக்குரியராகலாம். அவரைப் புலவர் எனப் புகல்வதும் பொருந்தாது.