பக்கம்:எப்படி வளரும் தமிழ்.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மங்கல வாழ்த்து

85


கேடனாகப் படைக்கப்பட்டுள்ளான். ஆகவே, அவனுக்கு முதன்மை தாராது தன்னேரில்லாத் தலைவியாகிய கண்ணகிக்கே சிலம்பில் முதன்மை தரப்பட்டுள்ளது.

கண்ணகிக்குத்தான் முதன்மை தரப்பட்டுள்ளது, என்பது எவ்வாறு தெரி கிறது? கண்ணகியின் பெற்றோரும் கோவலன் பெற்றோரும் கண்ணகிக்கும் கோவலனுக்கும் திருமணம் செய்து வைக்க விரும்புகிறார்கள் என்றவிடத்து,

“மாகவான் நிகர்வண்கை மாநாய்கன் குலக்கொம்பர்
ஈகைவான் கொடியன்னாள் ஈராறாண்டகவையாள் - வரி 23

மாதரார் தொழுதேத்த வயங்கிய பெருங்குணத்துக்

காதலாள் பெயர்மன்னும் கண்ணகியென் பாள்மன்னோ” - வரி 28

என மங்கல வாழ்த்துப் பாடலில் கண்ணகியை முதலிற் கூறுகிறார் ஆசிரியர்.

வருநிதி பிறர்க்கார்த்தும் மாசாத்து வானென்பான்
இருநிதிக் கிழவன்மகன் ஈறெட்டாண்டகவையான்” - வரி 33

கண்டேத்தும் செவ்வேள்என் றிசைபோக்கிக் காதலாற்

கொண்டேத்துங் கிழமையான் கோவலன் என்பான்” - வரி 38

எனக் கோவலனை அதே மங்கல வாழ்த்துப் பாடலில் இரண்டாவதாகக் கூறுகிறார். மேலும் மனையறம்படுத்த காதையில், கண்ணகியும் கோவலனும் கட்டிலின் மீதமர்ந்தனர் என்பதைக்

“கயமலர்க் கண்ணகியும் காதற் கொழுநனும்
மயன்விதித்தன்ன மணிக்கால் அமளிமிசை

நெடுநிலைமாடத்திடைநிலைத்திருந்துழி” - வரி 11

என்று கண்ணகியைத்தான் முதலிற் கூறிக் கோவலனை இரண்டாவதாகக் கூறுகிறார். இவ்வாறு தொடக்கத்திலேயே மங்கல வாழ்த்துப் பாடலிலும் அடுத்த மனையறம்படுத்த காதையிலும் கண்ணகிக்கே முதன்மை தரப்பட்டுள்ளது.

மேலும், இந் நால் சிலப்பதிகாரம் எனப் பெயர் பெற்றுள்ளது. பெண்கள் காலில் அணியும் அணிக்குச் சிலம்பு என்று பெயர். ஆண்கள் காலில் அணியும் அணிக்குக் கழல் என்று பெயர். நூலின் பெயர்க் காரணத்தை நோக்கும் பொழுதும் பெண்மைக்கே முதன்மை தரப்பட்டுள்ளது என்பது பெறப்படுகிறது.

ஞாயிறு ஆண்பாலாகவும் திங்கள் பெண்பாலாகவும் கூறப்படுவது கவி மரபு. ஆகவே, பெண்மைக்கு முதலிடம் தரும் காப்பியத்தில் மங்கல வாழ்த்துப் பாடலில் பெண்பாலுக்குரிய திங்களை முதலிற் கூறுகிறார். கோவலன் இரண்டாம் நிலையில் வருவது போல ஞாயிறும் இரண்டாம் இடம் பெறுகிறது.

மனையறம் படுத்த காதையில் இளங்கோவடிகள்,