பக்கம்:எப்படி வளரும் தமிழ்.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22

முடியரசன்


ஏழு கண்ணிகள் கொண்ட இப்பாடல் “செற்றந் தவிர்ந்தேன்” என்னுந் தலைப்பில், ‘காவியப் பாவை’ என்னும் தொகுப்பில் வெளியிடப்பட்டது.

குமணன் என்ற என் மகன் ஒரு பாடல் தோன்றக் காரணமாக இருந்தான். இவன் பிள்ளைப் பருவத்தில் கொழுகொழு வென்றிருப்பான். ஒருநாள் விடியலில் என் துணைவியார் கோலப் பொடியைச் சிறிய திண்ணையில் வைத்துவிட்டு வாயிலில் நீர் தெளித்துக்கொண்டிருந்தார். அப்பொழுது தவழ்ந்துகொண்டே வெளியில் வந்த அச் சிறுவன் திண்ணையருகே வந்து, அந்தக் கோலப் பொடியை இழுத்துத் தலையில் கொட்டிக்கொண்டான். அஃது உடல் முழுதும் சிந்திவிட்டது.

என் துணைவியார் என்னை அழைத்துக் காட்டினார். நான் ஓடி வந்து பார்த்தேன். வெள்ளைப் பிள்ளையார் போல அமர்ந்திருந்தான். எனக்கு ஒரே சிரிப்பு. என் மனைவிக்கோ ஒரே எரிச்சல். உடனே ஒரு தாய் தன் பிள்ளையைப் பற்றிக் கூறுவதாக அமைந்த பாடலொன்றை எழுதினேன்.

எடுப்பு

சொன்னாலும் புரியாத பருவம் - என்றன்
துயரத்தைச் சற்றேனும் உணராத சிறுவன் - சொன்னாலும்
வாயிலில் மாக்கோலம் போட்டுப் பின்னர்
வந்தங்கு நோக்குவேன் அவன் கூச்சல் கேட்டுக்
கோயிலில் பிள்ளையார் போலே - அந்தக்
கோலப்பொடிக்குள்ளே மூழ்கித் தவிப்பான்- சொன்னாலும்

.............................................
பஞ்சணையில் துயில் கொள்ளும் போது - சின்ன
பாலகனின் பால்வழியும் கண்ணிமையின் மீது
கொஞ்சிவிளை யாடுமெழில் காண்பேன் - செய்த

குறும்பெல்லாங் காணாத தாயுள்ளம் பூண்பேன் - சொன்னாலும்

‘பிள்ளைக் குறும்பு’ என்ற தலைப்பில் வெளிவந்துள்ள இவ்விசைப் பாடலும் ‘காவியப் பாவை’யைச் சேர்ந்தது.

ஒருநாள் என் இல்லத்தில் தேர்வுத்தாள் திருத்திக்கொண்டிருந்தேன். அப்பொழுது அத்தர் விற்கும் வணிகர் ஒருவர் வந்து, வாங்கிக் கொள்ளுமாறு வற்புறுத்தினார். இப்பொழுது வேண்டாம்; பிறகு வாங்கிக் கொள்ளுகிறேன் என்று எவ்வளவோ சொல்லியும் விடவில்லை. “இது உயர்ந்த சரக்கு; இது பாரிசு; இது இங்கிலாந்து; இது பம்பாய்” என்று சொல்லிக்கொண்டே என் சட்டையில்