பக்கம்:எப்படி வளரும் தமிழ்.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கூட்டுக் களியினிலே கவிதை

39


“ஆழ நெடுத்திரை ஆறு கடத்திவன் போவாரோ?

வேழ நெடும்படை கண்டு விலங்கிடும் வில்லானோ?”

என்று பேசுகிறான். மீண்டும் இப் பாடலை வாய்விட்டுச் சொல்லிப் பாருங்கள். சொல்லும்பொழுது நம் கண்முன் கம்பனா நிற்கிறான்? வெங்கரி அனைய - விற்பிடித்த குகன்தான் நிற்கிறான்.

இவ்வண்ணம் பொருள்களுடன் ஒன்றும் பொழுதுதான் உண்மைக் கவிதைகள் பிறக்கின்றன என்னும் உண்மையை இதன் வாயிலாக நாம் உணர்கிறோம். பாரதியார் இவ்வுண்மையை நன்குணர்ந்தமையாலேதான், கவிதையைப் பற்றிக் குறிப்பிடும்பொழுது ‘கவிதையாம் மணிப்பெயர்க் காதலி’ என்றும் ‘மனைவியாம் கவிதைத் தலைவி’ என்றும் உணர்த்திச் சென்றுள்ளார்.

(மேலைச் சிவபுரி - சன்மார்க்க சபைப் பொன்விழா மலர் -1.12.1958)