பக்கம்:எப்படி வளரும் தமிழ்.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8

கவிதை இன்பம் - சொல்லழகு

எது கவிதை ?

கவிஞன் அவ்வப் பொருள்களோடு ஒன்றி நின்று, உணர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு பாடும் கவிதைகள், பயிலுந்தோறும் நமக்குப் பேரின்பத்தை ஊட்டிக்கொண்டேயிருக்கின்றன. கவிதைப் பண்பு முதிர்ந்துள்ள கவிதைகளே உள்ளத்தைத் தொட்டு, உள் நரம்புகளை நீவி இன்பத்தை எழுப்ப வல்லன; அவ்வாறு இன்பத்தை எழுப்ப வல்லதே கவிதை. எடுத்துக்காட்டாக ஒன்று காண்போம்.

இனிய சொல்லை இயம்பும் வாயினள்

இவ் வரியில் நான்கு சீர்கள் இருக்கின்றன; அகவல் ஓசை இருக்கிறது; மோனை யும் இருக்கிறது. எனினும் இவ் வரி, கவிதையாகி உள்ளத்தைக் கவர்வதாக இல்லை. அதனால் இன்பந் தருவதாக இல்லை. இதே கருத்தைக் கவிஞன் கவிதையாக்கி இனிமையாக்கித் தருவதைக் கேளுங்கள்:

“கன்னலிலேசாறெடுத்து தமிழ்குழைத்துக்

கனி இதழால் பரிமாறும் இனிய சொல்லாள்”

கன்னலின் சாறு இனியது; அதிலே குழைக்கப்பட்டுள்ள தமிழும் இனியது; பரிமாறும் இதழோ கனியிதழ்; இனிமைக்குக் கேட்கவா வேண்டும்! இந்த இதழ் பரிமாறும் சொற்களில் இனிமை குறைவாகவா இருக்கும்? அவ்வளவு இனிய சொற்களைப் பேசுபவள் என்பது கருத்து. இவ் வரியிலே கவிதை இருக்கிறது; இனிமை இருக்கிறது; ஆதலால் இன்பமும் இருக்கிறது. மீண்டும் அவ்வின்பத்தை நுகருங்கள்! “கன்னலிலே சாறெடுத்து தமிழ் குழைத்துக் கனி இதழால் பரிமாறும் இனிய சொல்லாள்” - இந்த வரி “பாண்டியன் பரிசு” என்ற நூல் தந்த பரிசிலாகும். (இயல் 76)

இவ் வரியிலே மிகுதியும் இனிய - அழகிய சொல் ‘பரிமாறும்’ என்ற சொல் லாகும். இச்சொல்லின் அழகுதான் யாது? அத்தலைவி பேசும் இனிய சொல்லை உணவாக உருவகம் செய்கின்றார் கவிஞர். உணவு கருப்பஞ் சாற்றிலே சமைக்கப்-