பக்கம்:எப்படி வளரும் தமிழ்.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவேந்தர் வாழ்வும் இலக்கியப் பணியும்

55


“நீசக் குயிலும் நெருப்புச் சுவைக்குரலில்

ஆசை ததும்பி அமுதூறப் பாடியதே’

என்று கூறி விடுகிறார். ‘நீசக்குயில்’ ‘நெருப்புக்குரல்’ எனவும் சினந்து கூறிய அவரே, அதே இடத்தில் ‘சுவைக்குரல்’ எனவும் ‘அமுதூறப் பாடியதே’ எனவும் வியந்து மகிழ்கிறார். அதுபோலவே நம் பாட்டுக் குயிலை - புரட்சிக் குயிலைத் தமிழகமும் ‘நாத்திகக் குயில்’ என்றது; ‘நடுக்குறுத்துங் குரல்’ என்றது. எனினும் அதே தமிழகம் அதே சமயம் ‘நாம் வளரப் பாடியதே’ என்றும் பூரித்தது.

பேராசிரியர் சாமிநாதன் என்பார், 1938இல் ‘அனுமான்’ இதழில் பாவேந்தர் பாடலைத் திறனாய்வு செய்கிறார். பாவேந்தரின் கவிதைகளிலும் நாடகங்களிலும் குற்றங் குறைகள் கணக்கில்லை என்கிறார். பாட்டுக்குப் பாட்டு கொள்கை முரண்பாடு காணப்படுகிறது என்கிறார். கவிதையென்னும் தீயைப் பக்தி என்னும் எண்ணெய் விட்டு வளர்க்காது, பகுத்தறிவு என்னும் தண்ணீர் வார்த்து வளர்க்கப் பார்க்கிறார் எனச் சாடுகிறார். இன்னும் சில இடங்களில் கிண்டலாக எழுதுகிறார்.

இப்படித் தமது வெறுப்பை - உள்ளக் குமுறலைக் கொட்டிவிட்ட பேராசிரியரே அதே பகுதியில், ‘ஆனால் இவையெல்லாம் திவ்வியமான தேன் கூட்டில் பதுங்கிக் கிடக்கும் தேனீக் கொட்டல்’ என்றும், ‘தமிழ்நாட்டில் இன்று உயிருடன் இருக்கும் கவிகளுள் உண்மைக் கவி யார்? உயிர்க் கவி யார்? சிரஞ்சீவிக் கவி யார்? என்று கேள்விகள் கிளம்பினால், சற்றும் சந்தேகமின்றிப் பாரதிதாசன் என்று ஒரு விடைதான் நம்மால் கொடுக்க முடியும்’ என அறுதியிட்டுங் கூறிவிடுகிறார். (க.கு.நெ.கு.பக்.53-54)

தேனை எடுத்தால் தேனீ கொட்டாமலா இருக்கும்? கொட்டப்பட்ட பேராசிரியர் தேனின் சுவையை மறந்துவிடவில்லை. வெகுவாகப் பாராட்டுகிறார். செரிச்சல் கொள்ளும் உள்ளங்களும் பாராட்டக் காரணம் என்ன? 1938இல் வ.ரா.என வழங்கப்படும் வ.ராமசாமி ஐயங்கார் எழுதிய எழுத்து, இதற்கு விடை தருவது போல அமைந்துள்ளது.

“ஆவேசத்தையும் உணர்ச்சியையும் வெள்ளமாகக் கொட்டும் உயிர்க் கவி பாரதிதாசன் என்பது எனது தாழ்மையான எண்ணம். அவர் கையாளும் சொற்களின் எழிலையும் பசையையும் விசித்திரத் தன்மையையும் கண்டு அனுபவிப்பவர்கள் நான் சொல்வதை ஆதரிப்பார்கள்” (க.கு.நெ.கு.பக்.265) என்று எழுதுகிறார். ஆம்; பாவேந்தரின் பாடல்களிலே உள்ள ‘பசை’ தான் எரியும் உள்ளங்களையும் அருகில் கொணர்ந்து ஒட்டிவிடச் செய்கிறது.

போர் மறவன்

தனி வாழ்வில் எதிர்ப்பு, பொது வாழ்வில் எதிர்ப்பு, இலக்கியத் துறையா? அங்கே எதிர்ப்பு, அரசியல் துறையா? அடாத எதிர்ப்பு, சமயம் சமுதாயம்