பக்கம்:எப்படி வளரும் தமிழ்.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

77


கணவனுக்குப் பரிமாறுகிறாள். கணவன் அதனை இனிது, இனிது என்று கூறிக் கொண்டு உண்ணுகிறான். தலைவி தன் முகத்தில் நுண்ணிய மகிழ்ச்சியைக் காட்டுகிறாள். இப் பாடலால் தலைவி தானே சமைப்பதையும் அவள் உழைப்பைக் கணவன் பாராட்டுவதையும், அதனால் அவள் புன்மூரல் செய்வதையும் அக் குடும்பம் அன்பு மயமானது என்பதையும் அறிந்து கொள்கிறோம்.

முதுமையிலும் தாம் இளமையோடிருப்பதற்குக் காரணமாகப் பிசிராந்தையார், நல்ல சமுதாயச் சூழல் என்றார். அதுமட்டுமின்றி நற்குண நற்செய்கைகளால் மேம்பட்ட என் மனைவியும் என் மக்களும் அறிவுநிரம்பப் பெற்றவர்கள் என்று குடும்ப அமைப்பும் காரணம் என்று கூறுகின்றார்.

நல்ல அரசன், நல்ல குடும்பம், நல்ல சமுதாயம், அதனால் எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். அம் மகிழ்ச்சிப் பெருக்கால் இளமையோடிருக்கிறேன் எனக் கூறுகிறார்.

இவ்வாறு பண்டை நாளிற் பெருகிக் கிடந்த அரசியல் நாகரிகத்தையும் மன்பதை நாகரிகத்தையும் குடும்ப நாகரிகத்தையும் நம் பண்டைய இலக்கியங்கள் எடுத்துக்காட்டுவதால் வரலாற்றாசிரியர்கள் தமிழ் நாகரிகம் உலக நாகரிகத்தின் தொட்டில் என்று கூறுகின்றனர்.